Home /News /sports /

இந்தியா டாஸ் வென்று பேட்டிங்- அணியில் அதிர்ச்சிகர மாற்றம்

இந்தியா டாஸ் வென்று பேட்டிங்- அணியில் அதிர்ச்சிகர மாற்றம்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

    முதல் 2 போட்டிகளில் டாஸ் வென்று சேசிங் செய்தார், இப்போது பேட்டிங் பயிற்சிக்காக முதலில் பேட்டிங் எடுத்ததாகத் தெரிவித்தா, அதாவது ஆசியக் கோப்பைக்கு முன்பாக புதிய பந்தில் அதுவும் பந்துகள் கொஞ்சமாவது ஸ்விங் ஆகும் ஹராரே பிட்சில் ஆடிப்பழகினால் நல்லது என்கிறார் கே.எல்.ராகுல்.

    அணியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு தீபக் சாஹர், ஆவேஷ் கான் வந்துள்ளனர். ஜிம்பாப்வே அணியில் சிவாங்காவுக்குப் பதில் ரிச்சர்ட் நகாரவா, மெதேவெரேவுக்கு பதில் டோனி முன்யோங்கா வந்துள்ளனர்.

    இந்திய அணி: ராகுல், தவான், கில், இஷான்கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான்.



    இந்தப் போட்டியில் வென்று தொடரை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்து கைப்பற்ற இந்திய அணி நிச்சயமாக போராடும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Indian cricket team, Zimbabwe

    அடுத்த செய்தி