ஹராரேயில் நடைபெற்ற 3-வதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 289/8 என்று ஸ்கோர் எடுக்க ஜிம்பாப்வே 276 ரன்களுக்கு கடைசி ஓவர் வரை வந்து போராடி தோல்வி கண்டது.
ஜிம்பாப்வே அணியின் சிகந்தர் ரசா 95 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்து தன் சமீபத்திய 6 ஒருநாள் போட்டிகளில் 3வது சதத்தை எடுத்தார், கடைசியில் 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்தை தூக்கி மிட் ஆனில் அடிக்க அங்கு ஷுப்மன் கில் முன்னால் டைவ் அடித்து அட்டகாசமான கேட்சை எடுத்ததே இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைகிறது, முன்னதாக திணறிக்கொண்டிருந்த இந்திய அணியை தன் 130 ரன்கள் மூலம் வெற்றி ஸ்கோராக மாற்றியதும் ஷுப்மன் கில்தான். உண்மையான ஆட்ட நாயகன் அவரே.
ஏன் கே.எல்.ராகுல் முதல் 2 போட்டிகளில் டாஸ் வென்று அவர்களை பேட் செய்ய அழைத்தார் என்பது புரிகிறது, சேசிங்கில் ஜிம்பாப்வே பெட்டராக ஆடுகின்றனர்.
ஜிம்பாப்வே சேசிங்கில் சான் வில்லியம்ஸ் முதலில் 46 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். தீபக் சாஹருக்கு அடி, ஆவேஷ் கானுக்கு அடி, குறிப்பாக தீபக் சாஹர் 10 ஓவர் 75 ரன்கள் 2 விக்கெட் என்று சாத்து வாங்கினார், ஆவேஷ் கான் 9.3 ஓவர்களில் 66 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் இவர் பவுலிங்கில் நம்பகத்தன்மை இல்லை. ஷர்துல் தாக்கூர் 9 ஓவர் 55 ரன் முக்கிய விக்கெட்டான அதுவும் ஷுப்மன் கில்லின் திகைப்பூட்டும் கேட்சினால் விளைந்த சிகந்தர் ரசா விக்கெட். நல்ல பவுலிங் என்றால் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ் (2/38), அக்சர் படேல் (2/30) இருவரும் 20 ஓவர்களில் 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஜிம்பாப்வே ஒரு கட்டத்தில் 27.2 ஓவர்களில் 122/5 என்று தடுமாறியது.ரியான் பர்ல் அவுட் ஆகும் போது 145/6, லூக் ஜாங்வி அவுட் ஆகும் போது 35.5 ஓவர்களில் 169/7. அதன் பிறகு ஆல்ரவுண்டர் இவான்ஸ், இவர் பவுலிங்கிலும் 5 விக்கெட்டுகளை இன்று கைப்பற்றினார், இவரும் சிகந்தர் ரசாவும் சேர்ந்து 8வது விக்கெட்டுக்காக 104 ரன்களை சுமார் 73 பந்துகளில் சேர்த்ததுதான் இந்தியாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. பிராட் இவான்ஸ் 28 ரன்களில் ஆவேஷ் கான் பந்தில் எல்.பி.ஆனார். ஆனல் இதை நடுவர் அவுட் கொடுக்கவில்லை எனில் இந்தியாவுக்கு ரிவியூ தீர்ந்திருந்த நிலையில் ஜிம்பாப்வே வெற்றிக்கு வித்திட்டிருக்கும், ஆனால் நடுவர் அவுட் கொடுத்தார், பேட்டர் ரிவியூ செய்தார், பந்து ஸ்டம்பைத் தாக்குவது ரீப்ளேயில் தெரிந்தது.
சிகந்தர் ரசா 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 61 பந்துகளில் அரைசதம் கண்டார், பிறகு 88 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் சதம் கண்ட அவர் கடைசியில் 95 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்து இந்தியப் பந்து வீச்சை பிரித்து மேய்ந்தார், ஷுப்மன் கில்லின் அபார கேச் இல்லையெனில் இவர் ஜிம்பாப்வேவுக்கு ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார், ஆம் இந்த இலக்கை விரட்டியிருந்தால் ஜிம்பாப்வே இந்திய அணிக்கு எதிராக வெற்றிகரமாகத் துரத்திய பெரிய இலக்கு இதுவாகத்தான் இருக்கும்.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ஷுப்மன் கில்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian cricket team, Indian team, Shubman Gill, Sports, Zimbabwe