Home /News /sports /

மலையாளிகள் என்னை ‘சேட்டா சேட்டா’ என்று அழைத்து ஆதரிப்பது பெருமையளிக்கிறது: சஞ்சு சாம்சன்

மலையாளிகள் என்னை ‘சேட்டா சேட்டா’ என்று அழைத்து ஆதரிப்பது பெருமையளிக்கிறது: சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

ஸ்டார் வீரர்கள் இல்லாத போது இட்டு நிரப்பும் வீரராக பயன்பட்டு வரும் சஞ்சு சாம்சன் என்ற வீரர் எப்போது வாய்ப்பு கொடுத்தாலும் அதை சமீபமாக சிறந்த முறையில் பயன்படுத்தி வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ஸ்டார் வீரர்கள் இல்லாத போது இட்டு நிரப்பும் வீரராக பயன்பட்டு வரும் சஞ்சு சாம்சன் என்ற வீரர் எப்போது வாய்ப்பு கொடுத்தாலும் அதை சமீபமாக சிறந்த முறையில் பயன்படுத்தி வருகிறார்.

    இன்று இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி விளையாடப்படும் முன்னர் ரோஹன் கவாஸ்கரிடம் பேசிய சஞ்சு சாம்சன் கூறியதாவது:

    ஒரு நெருக்கடியான தருணத்தில் இறங்கி அணிக்காக ஆடுவது எனக்கு உண்மையில் எழுச்சியைத் தருகிறது. ஜிம்பாப்வேயும் அப்போது நன்றாக வீசிக்கொண்டிருந்தனர்.

    களத்தில் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் செலவழிக்கிறேன். கரியரில் எங்கு சென்றாலும் பிரஷரை மனதுக்குள் கொண்டு வந்து அதை ஒரு பாசிட்டிவ் ஆக பார்க்க வெண்டுமென்பதில் நான் நம்பிக்கை கொண்டவன்.

    நான் உண்மையில் உள்நாட்டு கிரிக்கெட்டை கடந்த 4-5 ஆண்டுகளாக உண்மையில் மகிழ்ச்சியுடன் ஆடி வருகிறேன். அங்கு சாதிப்பது சவாலானது, உள்நாட்டு கிரிக்கெட் தான் என்னை பெட்டர் பிளேயராக உருவாக்கியுள்ளது.

    ஐபிஎல் தொடர் கிரிக்கெட் மீதான என் பார்வையையே மாற்றி விட்டது. முன்பெல்லாம் என் பேட்டிங்கை மட்டுமேதான் யோசிப்பேன். என் ஆட்டம் பற்றியதாகவே என் கவனம் இருக்கும். ஆனால் ஐபிஎல் கேப்டன்சி வேறொரு மனநிலையை உருவாக்கியது. மற்ற வீரர்களையும் நினைக்கும் விதமாக என்னை மாற்றியது.

    இந்திய அணிக்காக குறைவாகவே ஆடினாலும் நாடு முழுதும் உள்ள ரசிகர்கள் என்னை தொடர்வது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. நல்ல ஆதரவைப்பெற்று வருகிறேன்.

    நிறைய மலையாளிகள் ‘சேட்டா சேட்டா’ என்று என்னை நோக்கி உற்சாகமாகல் கூப்பிடும்போது அது என்னை பெருமையடையச் செய்கிறது” என்றார் சஞ்சு சாம்சன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Sanju Samson

    அடுத்த செய்தி