Home /News /sports /

ஜிம்பாப்வே வீரரை மன்கடிங் செய்தார் சாஹர்- ஆனால் அப்பீல் செய்யவில்லை

ஜிம்பாப்வே வீரரை மன்கடிங் செய்தார் சாஹர்- ஆனால் அப்பீல் செய்யவில்லை

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது கடைசி ஒருநாள் போட்டியில் 290 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஜிம்பாப்வே விளையாடி வருகிறது, இதில் முதல் பந்தை சாஹர் போட வந்தவுடனேயே மன்கடிங் செய்தார், ஆனால் அப்பீல் செய்யவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது கடைசி ஒருநாள் போட்டியில் 290 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஜிம்பாப்வே விளையாடி வருகிறது, இதில் முதல் பந்தை சாஹர் போட வந்தவுடனேயே மன்கடிங் செய்தார், ஆனால் அப்பீல் செய்யவில்லை.

    ஜிம்பாப்வே வீரர் இன்னசண்ட் கேயா ரன்னர் முனையில் சாஹர் ஓடி வரும்போது ஏகப்பட்ட அடிகள் கிரீசை விட்டு முன்னேறி வெளியே சென்றார், தீபக் சாஹர் ஓடி வந்தவர் பைல்களைத் தட்டி விட்டார், ஆனால் அவரும் அப்பீல் செய்யவில்லை, இந்திய அணியும் அப்பீல் செய்யாமல் பெருந்தன்மையாக விட்டனர். ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டைக் காட்டினர்.

    எனவே விதிப்படி இன்னசண்ட் கேயா அவுட், ரன் அவுட், மன்கடிங் முறையில் அவுட், ஆனால் யாரும் இதை சீரியசாக அவுட் என முறையீடு செய்யாததால் நடுவர் டெட் பால் என்று அறிவித்தார், அதன் பிறகுதான் தன் முதல் பந்தை சாஹர் வீசினார்.

    கடைசியில் சற்று முன்னர் சாஹர் 3வது ஓவரில் கேயாவை அருமையான இன்ஸ்விங்கின் யார்க்கரில் எல்.பி.யில் வீழ்த்தினார், ஏனெனில் இன்னசண்ட் கேயா அதற்கு முந்தைய பந்தைத்தான் இறங்கி வந்து மிட் ஆன் மேல் பவுண்டரி விளாசினார், உண்மையில் வேகம் இல்லாத சாஹரை அப்படித்தான் ஆட வேண்டும். ஆனால் யார்க்கரில் வெளியேறினார் கேயா.

    ஜிம்பாப்வே 7 ரன்களுக்கு 1 விக்கெட். இப்போது கைத்தானோவும் வில்லியம்சும் ஆடுகின்றனர், முன்னதாக ஷுப்மன் கில்லின் பிரமாதமான கண்களுக்கு குளிர்ச்சியான 130 ரன்களாலும் இஷான் இஷனின் 50 ரன்களாலும் இந்தியா 289/8 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே பவுலர் இவான்ஸ் அருமையாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Indian cricket team

    அடுத்த செய்தி