முகப்பு /செய்தி /விளையாட்டு / ஜிம்பாப்வே பின் கள வீரர்கள் அபாரம் - 110/8-லிருந்து 189 ரன்கள்

ஜிம்பாப்வே பின் கள வீரர்கள் அபாரம் - 110/8-லிருந்து 189 ரன்கள்

தீபக் சாஹர் அருமை

தீபக் சாஹர் அருமை

ஹராரேயில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஜிம்பாப்வே 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 83/6 என்ற நிலையிலிருந்து பின் கள வீரர்கள் நன்றாக ஆடி ஸ்கோரை 189 ரன்களுக்குக் கொண்டு வந்தனர், ஆனால் ஜிம்பாப்வே 40.3 ஓவர்கள்தான் தாக்குப் பிடித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஹராரேயில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஜிம்பாப்வே 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 83/6 என்ற நிலையிலிருந்து பின் கள வீரர்கள் நன்றாக ஆடி ஸ்கோரை 189 ரன்களுக்குக் கொண்டு வந்தனர், ஆனால் ஜிம்பாப்வே 40.3 ஓவர்கள்தான் தாக்குப் பிடித்தனர்.

ஜிம்பாப்வே கேப்டன் ரெஜிஸ் சகப்வா அதிகபட்சமாக 51 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். பின் வரிசையில் பிராட் இவான்ஸ் 29 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மற்றொரு பின் கள வீரர் ரிச்சர்ட் நகாரவா 42 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 34 எடுத்தார். 9 வைடுகளுடன் கூடிய உதிரி 25 ரன்கள்.

இந்தியத் தரப்பில் தீபக் சாஹர் அருமையாக வீசி ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, பிரசித் கிருஷ்ணா 8 ஓவர்களில் 8 பவுண்டரிகள் கொடுத்து 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிராஜ் 8 ஓவர் 2 மெய்டன் 36 ரன் 1 விக்கெட். குல்தீப் யாதவ் பாவம் நன்றாகவீசி 10 ஓவர் 36 ரன்கள் மட்டுமே கொடுத்து விக்கெட் எதையும் எடுக்கவில்லை.

ஜிம்பாப்வே ஒரு கட்டத்தில் 110/8 என்று இருந்தது அதன் பிறகு 9வது விக்கெட்டுக்காக 70 ரன்களை இவான்ஸ் மற்றும் நகார்வா சேர்த்தனர். இதை 11 ஓவர்களில் சேர்த்ததும் கவனிக்கத்தக்கது. இந்தக் கட்டத்தில் இந்தியப் பந்து வீச்சு விடைகளைத் தேடி அலைந்தது. ஜிம்பாப்வே 200 ரன்களைக் கடந்து விடும் போல்தான் இருந்தது. அப்போதுதான் நகார்வாவை பிரசித் கிருஷ்ணா துல்லிய யார்க்கரில் வீழ்த்தினார்.

இது நிச்சயம் போதாமையான ரன்கள்தான், ஆனால் பிட்ச் நல்ல பிட்ச் ஆக தெரிகிறது, இந்தியாவுக்கு ஜிம்பாப்வே சவால் அளிக்குமா என்பதைப் சேசிங்கில் பார்க்க வேண்டும்.

First published:

Tags: Cricket, India, ODI, Zimbabwe