முகப்பு /செய்தி /விளையாட்டு / நீண்ட இடைவெளிக்குப்பின் தீபக் சாஹர் 3 விக்கெட் - ஜிம்பாப்வே 4 விக். இழந்து திணறல்

நீண்ட இடைவெளிக்குப்பின் தீபக் சாஹர் 3 விக்கெட் - ஜிம்பாப்வே 4 விக். இழந்து திணறல்

தீபக் சாஹர் கம் பேக். 3விக்கெட்

தீபக் சாஹர் கம் பேக். 3விக்கெட்

இந்திய-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஹராரேயில் தொடங்கியுள்ளது. இந்தியா டாஸ் வென்று முதலில் ஜிம்பாபவேயை பேட் செய்ய அழைத்துள்ளது. ஜிம்பாப்வே 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஹராரேயில் தொடங்கியுள்ளது. இந்தியா டாஸ் வென்று முதலில் ஜிம்பாபவேயை பேட் செய்ய அழைத்துள்ளது. ஜிம்பாப்வே 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது.

சற்று முன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அணிக்கு வந்துள்ள தீபக் சாஹர், ஜிம்பாப்வே தொடக்க வீரர்களான இன்னசண்ட் கேயா மற்றும் மருமானி ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இரண்டுமே சஞ்சு சாம்சன் கேட்ச்.

இன்னசண்ட் கேயாவுக்கு ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை வீசினார் தீபக் சாஹர், அவர் சற்றே அதிர்ச்சியடைந்து புல் ஷாட் ஆடினார், ஆனால் மட்டையின் வெளி விளிம்பில் பட்டு சாம்சனுக்கு வலது புறம் செல்ல முதல் முறையில் கேட்சை விட்டு 2ம் முறை பிடித்தார்.

சற்று முன் இன்னொரு தொடக்க வீரர் ததிவனஷி மருமானி 8 ரன்களில் தீபக் சாஹரின் அவுட்ஸ்விங்கரை எட்ஜ் செய்து சாம்சனிடம் கேட்ச் ஆனார். ஜிம்பாப்வே 26/2. சற்று முன்னர் சான் வில்லியம்ஸ் 1 ரன்னில் சிராஜிடம் அவுட் ஆனார். தவான் முதல் ஸ்லிப்பில் கேட்ச். ஜிம்பாப்வே 31/3.  கடைசியாக மெதவரே சாஹரின் அருமையான பந்தில் எல்.பி.ஆக ஜிம்பாப்வே 37/4 (11ஓவர்)

இந்திய அணி வருமாறு: ராகுல், ஷிகர் தவான், ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர், படேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்.

ஜிம்பாப்வே அணி: இன்னசண்ட் கேயா, மருமானி, சான் வில்லியம்ஸ், சிகந்தர் ரஸா, வெஸ்லி மெதவரே, ரெஜிஸ் சகப்வா (கேப்டன், விகீ), ரியான் பர்ல், லூக் ஜாங்வி, பிராட் இவான்ஸ், விக்டர் நியாவுச்சி, ரிச்சர்ட் நகர்வா.

First published:

Tags: India, ODI, Zimbabwe