சாதனைக்கு தேவை 1 ரன் - கோலியை விமர்சித்த தோனி ரசிகர்கள்!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தோனி இடம் பெறாததால், இனி தோனி இந்தியாவுக்காக அடுத்த ஆண்டே களமிறங்குவார்.

Web Desk | news18
Updated: November 3, 2018, 9:10 PM IST
சாதனைக்கு தேவை 1 ரன் - கோலியை விமர்சித்த தோனி ரசிகர்கள்!
கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி.
Web Desk | news18
Updated: November 3, 2018, 9:10 PM IST
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் தோனி 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், அவருக்கு கேப்டன் கோலி வாய்ப்பு அளிக்கவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. விக்கெட் கீப்பர் தோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,173 ரன்களை எடுத்துள்ளார். ஆனால், இதில் 174 ரன்கள் ஆசிய லெவன் அணிக்காக விளையாடி அவர் எடுத்ததாகும்.

இந்திய அணிக்காக மட்டும் விளையாடி அவர் எடுத்துள்ள ரன்கள் 9999 மட்டுமே. இன்னும் ஒரு ரன் எடுத்தால் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்கள் எடுத்த பெருமையை தோனி பெறுவார். கடைசி ஒருநாள் போட்டியில் தோனி களமிறங்கி இந்த மைல்கல்லை தொடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 104 ரன்களுக்குள் சுருண்டது. இதனால், இந்தியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ரோகித் சர்மா 64 ரன்களும் கோலி 33 ரன்களும் எடுத்தனர். தோனி பேட்டிங் செய்ய வாய்ப்பு இல்லாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

எளிய இலக்கு எனத்தெரிந்த கோலி, தவான் அவுட் ஆனதும் தான் பேட்டிங் இறங்காமல் தோனியை களமிறக்கியிருக்க வேண்டும் என தோனி ரசிகர்கள் கோலி மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இந்த ஆண்டில் இந்தியாவுக்கு ஒருநாள் போட்டிகள் ஏதும் இல்லை. அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியா உடன் இந்தியா ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

ஒரு ரன்னில் தோனியின் சாதனை தள்ளிப்போனதால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தோனி இடம் பெறாததால், இனி தோனி இந்தியாவுக்காக அடுத்த ஆண்டே களமிறங்குவார்.மேலும் செய்திகள்..

6 சதங்கள்... 1202 ரன்கள் - 2018-ம் ஆண்டின் “பிக்பாஸ்” விராட் கோலி!

Also See..

First published: November 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...