Home /News /sports /

IND vs WI: கோலி அவசரத்தில் ஆடியது போல் தோன்றியது - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

IND vs WI: கோலி அவசரத்தில் ஆடியது போல் தோன்றியது - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

கோலி.

கோலி.

Viral Kohli in IND vs WI: பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை மற்றவர்களை விடவும் கோலி நன்றாகவே புரிந்து வைத்திருப்பார். பந்து மட்டைக்கு வேகமாக வருவதில்லை என்பதும் கோலிக்குத் தெரியும்.

    விராட் கோலி தான் கேப்டன் அல்ல, கேப்டன் அல்ல, என்னையா தூக்குகிறீர்கள்? என்ற மனநிலையில் ஆடிவருவது அப்பட்டமாக தெரிகிறது. நேற்று மே.இ.தீவுகளுக்கு எதிராக எல்லா பந்துகளையும் அடிக்கும் மனநிலையில் விட்டேத்தியாக ஆடி 8 ரன்களில் வெளியேறியது திமிர்த்தனமான ஒரு இன்னிங்ஸாகவே இருப்பதைக் காண முடிந்தது.

    இந்நிலையில் கோலி குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்கையில், ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் கூறியதாவது:

    கோலி ஆடிய இன்னிங்ஸ் மிக மிக ஆச்சரியமாக இருந்தது. ஏதோ அவசரத்தில் ஆடியது போல் தோன்றியது. முதல் பந்தில் ஒன்றை முயற்சி செய்தார், 2வது இன்னிங்ஸில் வேறு ஒன்றை முயற்சி செய்தார். இவையெல்லாம் அசாதாரண ஷாட் முயற்சிகள், பொதுவாக நாம் கோலியுடன் இத்தகைய ஷாட்களை இணைத்துப் பார்ப்பதில்லை.

    அப்போதுதான் ரோஹித் சர்மா ஆட்டமிழந்துள்ளார். கோலியும் மேட்சைப் பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பார், புரிந்து கொண்டும் இருப்பார், பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை மற்றவர்களை விடவும் கோலி நன்றாகவே புரிந்து வைத்திருப்பார். பந்து மட்டைக்கு வேகமாக வருவதில்லை என்பதும் கோலிக்குத் தெரியும். இஷான் கிஷன் தடுமாறினார், ரோஹித் சர்மாவும் தடுமாறினார். ரோகித் சர்மா ஒரு அசாதாரணமான வீரர் என்பதால் பேட்டிங் ஏதோ சுலபம் போல் தெரிந்தது.

    Also read:  சுந்தர், செஹல் பந்து வீச்சில் 1000-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி- பேட்டிங்கில் திருப்தியற்ற நிலை தொடர்கிறது

    பிட்சில் பவுன்ஸ் நம்பகமுடையதாக இல்லை, ஒரு பந்து மேலே எகிறினால் ஒரு பந்து மட்டைக்குக் கீழ் சென்றது. இந்தச் சூழ்நிலையில் 4 பந்துகளை மட்டுமே கோலி ஆடியது மிக மிக ஆச்சரியமானதாகத் தெரிகிறது. அவரது ஆட்டத்தைப் பார்க்கும்போது அவர் சரியான ஒரு மன நிலையில் இல்லை என்றே தோன்றுகிறது. 4 பந்துகளையும் அவர் ஆடியது உத்தி ரீதியாகத் தவறாக இல்லை, எனவே உத்தி அங்கு பிரச்சனை இல்லை.

    அதுவும் கோலி போன்ற ஒருவரின் அறிவுக்கூர்மை, மற்றும் அனுபவம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது உத்தி பிரச்சனையில்லை. எனவே என்ன அவரிடம் தவறாகப் போகிறது, நாம் தென் ஆப்பிரிக்காவில் அவரைப் பார்த்தோம் ரன்கள் ஸ்கோர் பண்ணினார், ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் விராட் கோலி தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை.

    Also read: U19CWC: இங்கிலாந்தை தோற்கடித்து 5வது முறையாக மகுடம் சூடிய இந்திய ஜூனியர் அணி

    ரன்கள் ஸ்கோர் செய்தார் ஆனால் அது நல்ல ஸ்கோரும் இல்லை, அது கோலியின் ரன் எடுக்கும் முறையும் அல்ல என்பதுபோல்தான் தெரிந்தது. இந்த 4 பந்து இன்னிங்ஸ் உணர்த்துவது என்னவெனில் அவர் முழுமையாக தன்னை களத்துக்கு அர்ப்பணித்துக் கொள்ளவில்லை என்பதைக் காட்டியது. அவர் தன் ஆட்டத்தை சவுகரியமாக் உணரவில்லை.

    இவ்வாறு கூறினார் ஆகாஷ் சோப்ரா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ind vs WI ODI, India vs west indies, Virat Kohli

    அடுத்த செய்தி