Home /News /sports /

INDvWI | வான்கடே மைதானத்தில் பொழிந்த சிக்சர் மழை... ஹைலைட்ஸ் வீடியோ...!

INDvWI | வான்கடே மைதானத்தில் பொழிந்த சிக்சர் மழை... ஹைலைட்ஸ் வீடியோ...!

விராட் கோலி

விராட் கோலி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் 2 போட்டிகளில் 2வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றததால் மேற்கிந்திய தீவுகள் அணியின் பொல்லார்டு இந்த முடிவை எடுத்தார்.

ஆனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை சிதறவிட்டது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலியின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்தார்.

இமாலய இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் பொல்லார்டு அதிகபட்சமாக 68 ரன்கள் குவித்தார்.



வான்கடே மைதானத்தில் இரு அணி வீரர்களும் சிக்சர் மற்றும் பவுண்டரி மழை பொழிந்தனர். இதில் இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. கேப்டன் விராட் கோலி 29 பந்துகளில் 7 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் விளாசி 70 ரன்கள் குவித்தார்.
Published by:Vijay R
First published:

Tags: Cricket, India vs Westindies, Virat Kohli

அடுத்த செய்தி