#INDvsWI 2nd Test | இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்?

India vs WestIndies | Virat Kohli | விக்கெட் கீப்பிங்கில் பந்த் அல்லது சாஹா இருவரில் யாருக்கு வாய்பளிக்கப்படும் என்பது கேள்விகுறியாக உள்ளது.

Vijay R | news18-tamil
Updated: August 30, 2019, 1:54 PM IST
#INDvsWI 2nd Test | இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்?
India vs WestIndies | Virat Kohli | விக்கெட் கீப்பிங்கில் பந்த் அல்லது சாஹா இருவரில் யாருக்கு வாய்பளிக்கப்படும் என்பது கேள்விகுறியாக உள்ளது.
Vijay R | news18-tamil
Updated: August 30, 2019, 1:54 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்கா மைதானத்தில் இன்று 7 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது. வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி போட்டி போட்டுக் கொண்டு விக்கெட் எடுத்தனர்.

ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கைகொடுத்ததுடன் பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினார். டெஸ்ட் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா ஏமாற்றினாலும் துணைக் கேப்டன் ரஹானே அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.




ரோஹித் சர்மாவிற்கு பதிலாக அணியில் வாய்ப்பளிக்கப்பட்ட ஹனுமன் விஹாரியும் அரைச்சதம் அடித்து அணியில் தனது இடத்தை தக்கவைத்தார். இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டியில் அணியின் தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பிங்கில் பந்த் அல்லது சாஹா இருவரில் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேப்போன்று சுழற்பந்தில் அஸ்வின் அல்லது ஜடேஜா இருவரில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதும் குழப்பமாக உள்ளது.

Loading...




முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதால் மற்ற வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. கேப்டன் விராட் கோலி கலவையான வீரர்கள் தேவை என்று இதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Also Watch

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...