Home /News /sports /

INDvWI | டி20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி..? இன்று பலப்பரீட்சை

INDvWI | டி20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி..? இன்று பலப்பரீட்சை

INDvsWI

INDvsWI

India vs WestIndies | ரிஷப் பந்த் தொடர்ந்து சொதப்பி வருவதால் சஞ்சு சாம்சன் களமிறங்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா- மேற்குஇந்திய தீவுகள் இடையேயான இரண்டாவது டி-20 போட்டிகள் திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

    இந்தியா  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி மூன்று டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

    இதில், ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம் தொடரை இழக்காமல் இருக்க மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களும் போராடுவார்கள் என்பதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.

    இந்திய அணியில் ரிஷப் பந்த் தொடர்ந்து சொதப்பி வருவதால் சஞ்சு சாம்சன் களமிறங்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போன்று  பவுலர்களிலும் சில மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என எதிர்பாரக்கப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: India vs Westindies

    அடுத்த செய்தி