மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா அணி களமிறங்கவுள்ளது.
இந்தியா - மேற்கிந்தியா தீவுகள் அணிகளுக்கு-இடையே மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில், சென்னையில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரண்டாவது போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித், லோகேஷ், ரிஷப் பந்த, கேதர் ஜாதவ் என பேட்டிங் வரிசை பலமாக இருந்தபோதும், பந்துவீச்சு பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால், அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. மேலும், டெஸ்ட், டி-20, ஒருநாள் என மூன்றுவிதமான கிரிக்கெட்டையும் சேர்த்து, விராட் கோலிக்கு இன்றைய ஆட்டம் 400-வது சர்வதேச போட்டியாகும். எனவே, கோலி முத்திரை பதிக்கும் முனைப்பில் உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.