India vs West Indies:53 பந்தில் சதமெடுத்த போவெலுக்கு இடமில்லையா?- வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
India vs West Indies:53 பந்தில் சதமெடுத்த போவெலுக்கு இடமில்லையா?- வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
மே.இ.தீவுகள்
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இதில் இங்கிலாந்துக்கு எதிராக 3வது டி20 போட்டியில் 53 பந்துகளில் 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் விளாசிய போவெல் இல்லை என்பது ஆச்சரியமேற்படுத்தியுள்ளது.

கெமர் ரோச் அணிக்கு திரும்புகிறார். அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர், மிடில்-ஆர்டர் பேட்டர் எங்க்ருமா பானர் மற்றும் தொடக்க வீரர் பிராண்டன் கிங் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:
டி20 அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது, ஒருவேளை போவெல் அதில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மேஇ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3வது டி20 போட்டியில் ரோவ்மன் போவெலின் சிக்சர்கள் மழை சதத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-1 என்று இங்கிலாந்து வசம் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவெல் 53 பந்துகளில் 4 பவுண்டரி 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 20 ஓவர்களில் 224 ரன்கள் குவிக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தும் விடாப்பிடியாக விரட்டியது, ஆனால் 204/9 என்று முடிந்தது.
மைதானம் நெடுக இங்கிலாந்து பந்து வீச்சை விரட்டி சிக்சர் மழை பொழிந்த ரோவ்மென் போவெல், டி20யில் சதமெடுத்த 3வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார். முன்னதாக கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ் ஆகியோர் டி20 சதம் கண்டது குறிப்பிடத்தக்கது. போவெல் போன்றவர்களெல்லாம் அனைத்து வடிவங்களிலும் விளையாடக்கூடிய வீரர்.
மேலும் ஆளில்லாமல் தவிக்கும் மே.இ.தீவுகளுக்கு ஒரு வீரரை ஒரு பார்மில் உட்கார வைக்கும் சாதக நிலைமை கிடையாது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.