Home /News /sports /

India vs West Indies: சிறந்த ஸ்பின்னர் யார் செஹலா? வாஷிங்டன் சுந்தரா?

India vs West Indies: சிறந்த ஸ்பின்னர் யார் செஹலா? வாஷிங்டன் சுந்தரா?

செஹல் - சுந்தர்

செஹல் - சுந்தர்

செஹல் வீசிய 59 பந்துகளில் 38 டாட்பால்களை கழித்து விட்டால் மீதமுள்ள 21 பந்துகளில் 49 ரன்கள் கொடுத்துள்ளார் என்றால் ஸ்மார்ட் ரன் விகிதத்தின் படி செஹல் பந்துக்கு 2 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்துள்ளார். ஆனால் பெயர் என்னவோ செஹல், செஹல் என்று கொண்டாடப்படுகிறது. 71/7 என்ற நிலைமையில் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை மாறாக ஜேசன் ஹோல்டரிடம் அடி வாங்கியதுதான் நடந்தது.

மேலும் படிக்கவும் ...
ஞாயிற்றுக்கிழமை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய லெக் ஸ்பின்னர் யஜ்வேந்திர செஹல் மீண்டும் தனது பார்முக்குத் திரும்பினார். அவர் வீசிய 9.5 ஓவர்களில், செஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் அவரது அற்புதமான ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இதுமட்டுமல்ல, லெக் ஸ்பின்னர் முதல் ஒருநாள் போட்டியின் போது ஒரு முக்கியமான மைல்கல்லையும் கடந்தார். அவர் தனது 100வது ODI விக்கெட்டைக் கைப்பற்றினர். தற்போது 60 போட்டிகளில் 27.27 சராசரியுடன் 103 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அன்று மே.இ.தீவுகள் எடுத்த ஸ்கோர் 176 ரன்கள். 43.5 ஓவர்கள் தாக்குப் பிடித்தது. அதுவும் 71/7 என்ற நிலையிலிருந்து ஜேசன் ஹோல்டர், பேபியன் ஆலன் கொண்டு சென்றனர். மொத்த ஸ்கோரே 50 ஓவர்களுக்குக் கணக்கு வைத்தால் 3.5 ரன்கள்தான் ஓவருக்கு அவர்கள் எடுத்திருக்கின்றனர். ஆனால் செஹல் 10 ஓவர்கள் 49 ரன்கள் 4 விக்கெட். அதாவது ஒரு ஓவருக்கு 4.9 ரன்களை இவர் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார், மாறாக வாஷிங்டன் சுந்தர் 9 ஓவர் 1 மெய்டன் 30 ரன்களுக்கு 3 விக்கெட். எது சிறந்த பவுலிங்?

அன்று ஷர்துல் தாக்கூர் மட்டுமே 7 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 5.42 என்று வாங்கினார். மற்றபடி அனைவரும் சிக்கனமாக வீச செஹல் 9.5 ஓவர்கள் 49 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். சிக்கன விகிதம் 4.98. கிட்டத்தட்ட 5 ரன்கள் ஓவருக்கு. சுந்தர் ஓவருக்கு 3.33 ரன்களையே கொடுத்துள்ளார்.  மேலும் சுந்தர் 3 பவுண்டரிகளை மட்டுமே கொடுக்க, செஹல் 1 பவுண்டரி 4 சிக்சர்கள் விளாசப்பட்டார்.

செஹல் வீசிய 59 பந்துகளில் 38 டாட்பால்களை கழித்து விட்டால் மீதமுள்ள 21 பந்துகளில் 49 ரன்கள் கொடுத்துள்ளார் என்றால் ஸ்மார்ட் ரன் விகிதத்தின் படி செஹல் பந்துக்கு 2 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்துள்ளார். ஆனால் பெயர் என்னவோ செஹல், செஹல் என்று கொண்டாடப்படுகிறது. 71/7 என்ற நிலைமையில் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை மாறாக ஜேசன் ஹோல்டரிடம் அடி வாங்கியதுதான் நடந்தது.

மாறாக வாஷிங்டன் சுந்தரை எடுத்துக் கொண்டால் 54 பந்துகளில் 36 பந்துகள் டாட் பால்கள். அதாவது ரன் கொடுக்காத பந்துகள், இதைக் கழித்தால் மீதமுள்ள 18 பந்துகளில் 30 ரன்களை கொடுத்துள்ளார், அதில் 3 பவுண்டரிகள்தான். எனவே நல்ல ஸ்மார்ட் கேப்டனாக இருந்தால் வாஷிங்டன் சுந்தர் பந்துகளில் அதிகம் சிங்கிள், இரண்டு என்று எடுத்ததைக் கணித்து சுந்தர் பந்து வீச்சுக்கு நல்ல அட்டாக்கிங் பீல்ட் செட் அப் செய்திருப்பார். அப்படி செய்திருந்தால் செஹல் போல் அல்லாமல் வாஷிங்டன் சுந்தர் 5 விக்கெட்டுகளை செஹலை விட சிக்கனமாகக் கைப்பற்றியிருப்பார்.

Also Read: கிரிக்கெட்டை விட்டுட்டு உன் அப்பாவோட போய் ஆட்டோ ஓட்டு,’- நெருக்கடிகளையும் தந்தையின் நினைவையும் பகிர்ந்த சிராஜ்

ஷர்துல் தாக்கூருக்கு 7 ஓவர் கொடுப்பதற்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு 10வது ஓவரை கொடுத்திருக்கலாம். சிராஜுக்கு ஓவர்களே கொடுக்கப்பட்டது. ஒரு டாப் பவுலர் முழு கோட்டாவையும் முடிக்கவில்லை. இங்குதான் ரோஹித் சர்மா சோடை போகிறார், இதனால்தான் அல்ஜாரி ஜோசப், 250-260 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியாவை ஜெயித்திருப்போம் என்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர்தான் டாப் பவுலர், ஆனால் ஆட்ட நாயகன் விருது செஹலுக்கு அளிக்கப்படுகிறது, இதுதான் காலத்தின் கொடுமை என்பது.
Published by:Muthukumar
First published:

Tags: Ind vs WI, Ind vs WI ODI, India vs west indies

அடுத்த செய்தி