இந்தியா - மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி கனமழை காரணமாக தாமதம்!

Vijay R | news18-tamil
Updated: August 8, 2019, 7:56 PM IST
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி கனமழை காரணமாக தாமதம்!
IND v WI
Vijay R | news18-tamil
Updated: August 8, 2019, 7:56 PM IST
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் முதல் ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக டாஸ் போடுவது தாமதமாகி உள்ளது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகளை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி கயானாவில் உள்ள ப்ரோவிடென்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று இரவு 7 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த போட்டி மழையின் காரணமாக தாமதமாகி உள்ளது.கயானா மைதானத்தில் கனமழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை நின்றாலும் மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்தால் மேலும் தாமதமாகும். சீரான வானிலைக்கு வந்த பிறகே போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...