பும்ராவின் அசத்தல் ஹாட்ரிக் விக்கெட் வீடியோ...!

India vs West Indies Test | இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்களும், சமி 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Web Desk | news18
Updated: September 1, 2019, 8:08 AM IST
பும்ராவின் அசத்தல் ஹாட்ரிக் விக்கெட் வீடியோ...!
பும்ரா
Web Desk | news18
Updated: September 1, 2019, 8:08 AM IST
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர், பும்ரா தொடர்ந்து மூன்று விக்கெட்டுகள் எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது.

இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் லோகேஷ் ராகுல் (13 ரன்), அடுத்து வந்த புஜாரா (6 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர்.இதன் பின்னர் மயங்க் அகர்வாலும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். மயங்க் அகர்வால் 55 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் ரஹானே களம் கண்டார்.


மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி தனது 22-வது அரைசதத்தை நிறைவு செய்தார். இதற்கிடையே ரஹானே 24 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து ஹனுமா விஹாரி வந்தார். அணியின் ஸ்கோர் 202 ரன்களாக உயர்ந்த போது கோலி, ஹோல்டரின் பந்து வீச்சில்  சிக்கினார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 416 ரன்களை குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளும், கார்ன்வால் 3 விக்கெட்டும், பிராத்வெயிட், ரோச் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.

Loading...

இதனை தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பிராத்வெயிட், ஜான் கேம்ப்பெல் களம் இறங்கினர். இந்திய அணியின் அபார பந்து வீச்சில் ஆட்டத்தின்6.4 வது ஓவரில் ஜான் கேம்ப்பெல் 10 (38) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்ததாக களம் இறங்கிய பிராவோ, ப்ரோக்ஸ், ரோஸ்டன் சேஸ் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.

ப்ராவோ, ப்ரூக்ஸ், சேஸ் ஆகியோரை அடுத்தடுத்து தொடர்ந்து அவுட் செய்த பும்ரா ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய அணி வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார். 2006-ம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இர்பான் பதான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

தொடர்ந்து பும்ரா தனது அபார வீச்சில் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹமில்டன் 2 ரன்களுடனும், கான்வால் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்களும், சமி 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

First published: September 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...