மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி வெற்றி!

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளார். முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

news18
Updated: August 3, 2019, 11:21 PM IST
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி வெற்றி!
இந்திய அணி
news18
Updated: August 3, 2019, 11:21 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. இந்தப் போட்டிகள், கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்க கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளன.
இன்று முதலாவது 20 ஓவர் போட்டி, அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் உள்ள லாடர்கில்லில் நடைபெற்றது.


டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளார். முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோஹித் சர்மா களமிறங்கினர். தவான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அடுத்து களமிறங்கிய விராட் கோலி 19 ரன்களும், ரோஹித் சர்மா 24 ரன்களும் எடுத்தனர். ரிஷப் பன்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மனிஷ் பாண்டே 19 ரன்களும், குர்ணால் பாண்டியா 12 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 17.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...