இந்தியா - வெஸ்ட் இண்டிஸ் 2-வது ஒருநாள் போட்டி... நவ்தீப் சைனி, ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு இருக்கிறதா?

India vs West Indies | வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

news18
Updated: August 11, 2019, 10:56 AM IST
இந்தியா - வெஸ்ட் இண்டிஸ் 2-வது ஒருநாள் போட்டி... நவ்தீப் சைனி, ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு இருக்கிறதா?
இந்திய அணி
news18
Updated: August 11, 2019, 10:56 AM IST
இந்தியா - வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழையால் நிறுத்தப்பட்ட நிலையில் 2-வது போட்டியை எதிர்கொள்ள இரு அணி வீரர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். முதல் ஒரு நாள் போட்டி 13-ஓவர்கள் மட்டுமே போடப்பட்ட நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. வெஸ்ட் இண்டிஸ் அணி 1 விக்கெட்டை இழந்து 54 ரன்கள் எடுத்தது. கிறிஸ் கெயில் 4 ரன்களுக்கு குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் அல்லது மனிஷ் பாண்டே 4-வது இடத்தில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஷ்ரேயாஸ் அய்யரின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. இன்றைய போட்டி முழுமையாக நடைபெற்றால் வீரர்களின் செயல்பாடுகள் குறித்து தெரியவரும்.

இந்திய அணி வீரர் கலீல் அகமது 3 ஓவர்கள் வீசி 27 ரன்கள் வழங்கினார். அவருக்கு பதிலாக டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட நவ்தீப் சைனி ஆட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறதா? என்று தெரியவில்லை.

முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் பெரிதாக இரு அணியிலும் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரியவந்துள்ளது.

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டிஸ்: எவின் லெவிஸ், கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், கெமர் ரோச்.

இந்திய அணி - ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது

Also watch

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...