IND vs WI: முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது - மழை குறுக்கிடுமா?

IND vs WI:  முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது -  மழை குறுக்கிடுமா?
  • Share this:
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடைபெறவுள்ளது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, டி-20 தொடரை அடுத்து, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதன், முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, இரண்டு நாட்களாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

டி-20 போட்டியில் அசத்திய ரோஹித், லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் மிரட்டுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக விலகியதால் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில், இளம் வீரர்களைக் கொண்ட மேற்கிந்திய தீவுகளும் சவால் அளிக்கும் நோக்கில் உள்ளது. இதுகுறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் பொல்லார்டு, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதிக்கும் நோக்கில் தங்களது யுக்திகளை மாற்றியுள்ளோம் என தெரிவித்தார்.


First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்