சென்னையில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 289 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெறுகிறது.
இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்டு, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர்.
7-வது ஓவரில் காட்ரெல் பந்துவீச்சில் ராகுல் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், வந்த வேகத்தில் கேப்டன் விராட் கோலி, 4 ரன்களில் காட்ரெல் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
எதிர்பாராமல் பந்து ஸ்டெம்பை தகர்க்க சில நொடிகள் கோலி அதிர்ச்சியில் உறைந்தார். மறுபக்கம் பவுலர் காட்ரெல் சல்யூட் வைத்து கோலியை அனுப்பி வைத்தார்.
100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் அதிகரித்தது.
ஆட்டத்தின் 37-வது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்தும் 71 ரன்களுக்கு அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய கேதர் ஜாதவ் சற்று அதிரடியாக விளையாடினார். அவருக்கு ஜடேஜாவும் ஒத்துழைப்பு கொடுத்தார். 18-வது ஓவரில் கேதர் ஜாதவ் 40 ரன்களிலும், அதே ஓவரில் ஜடேஜா 21 ரன்களிலும் அவுட் ஆகினர்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
Click here for live score and updates....
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.