Home /News /sports /

INDvWI | மைதானத்தில் புகுந்து ஆட்டத்தை நிறுத்திய நாய்...!

INDvWI | மைதானத்தில் புகுந்து ஆட்டத்தை நிறுத்திய நாய்...!

News18

News18

India vs West Indies Live Cricket score |

  • News18
  • Last Updated :
    சென்னையில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 28 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெறுகிறது.

    இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்டு, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர்.

    7-வது ஓவரில் காட்ரெல் பந்துவீச்சில் ராகுல் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், வந்த வேகத்தில் கேப்டன் விராட் கோலி, 4 ரன்களில் காட்ரெல் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

    சற்றுநேரம் தாக்குப்பிடித்த ரோஹித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது, ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 27 ரன்களுடன் களமிறங்கினர்.

    போட்டியின் போது திடீரென மைதானத்தின் உள்ளே நாய் ஒன்று புகுந்தது. பீல்டிங் செய்ய இடையூறாக இருந்ததால், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நாயை விரட்ட முயற்சித்தார்.

    ஆனால், நாய் அவருக்கு போக்கு காட்டியது. இதனால், ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. நாய் விரட்டப்பட்ட நிலையில், போட்டி மீண்டும் தொடங்கியது.

     



    இந்தியா - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போட்டி காரணமாக, சென்னை சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

    போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானம் நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால், ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

     
    Published by:Sankar
    First published:

    Tags: Cricket, India vs west indies

    அடுத்த செய்தி