அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யுமா இந்தியா...? மேற்கிந்திய தீவுகளுடன் இன்று மோதல்...!

நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

Web Desk | news18
Updated: June 27, 2019, 8:31 AM IST
அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யுமா இந்தியா...? மேற்கிந்திய தீவுகளுடன் இன்று மோதல்...!
இந்திய அணி
Web Desk | news18
Updated: June 27, 2019, 8:31 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்,  மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் மேற்கு இந்திய தீவுகளை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பிர்மிங்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்நிலையில், மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.


இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி வெற்றி, தோல்வியின்றி முடிவடைந்தது. மேலும் இந்தத் தொடரில் ஒரு தோல்வியைக் கூட பெறாத அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேநேரம், மேற்கு இந்திய தீவுகள் அணியைப் பொறுத்தவரை, ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல், காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர்களான ஷெல்டன் கோட்டரெல், ஒஷானே தாமஸ் ஆகியோர் இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...  சிறுவனை கடத்துவது போல் நாடகமாடி எடுக்கப்பட்ட வீடியோ! வலுக்கும் கண்டன குரல்கள்

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...