கடந்த முறை கலக்கியவர் இம்முறை இல்லை... ரஹானே பொறுப்பான ஆட்டம்...! ஆண்டிகுவா டெஸ்ட் ஹைலைட்ஸ்

India vs West Indies Test | ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடிய அணி அப்படியே களம் இறங்குவதாக கோலி அறிவித்தார்.

news18
Updated: August 23, 2019, 9:00 AM IST
கடந்த முறை கலக்கியவர் இம்முறை இல்லை... ரஹானே பொறுப்பான ஆட்டம்...! ஆண்டிகுவா டெஸ்ட் ஹைலைட்ஸ்
Image: BCCI
news18
Updated: August 23, 2019, 9:00 AM IST
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.

மழை காரணமாக ஆண்டிகுவாவில் நடக்கும் முதல் போட்டி தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அஸ்வின், கடந்த வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் தொடர்நாயகன் விருது பெற்றவர் என்பதால், அவர் அணியில் இருப்பார் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கையை கோலி உடைத்தார்.


ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடிய அணி அப்படியே களம் இறங்குவதாக கோலி அறிவித்தார். இதன்படி ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா வாய்ப்பு பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரராக ஆல்-ரவுண்டர் ஷமார் புரூக்ஸ் சேர்க்கப்பட்டார். அந்த அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கம் வகித்தனர்.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, 25 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் விராட் கோலி 9 ரன்கள் மட்டுமே எடுத்து கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர் ராகுலுடன் கை கோர்த்த ரகானே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், மழையும் அவ்வபோது குறுக்கிட்டது.

இந்த நிலையில், 68.5 ஓவரில் மீண்டும் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 81 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ரோச் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


First published: August 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...