Home /News /sports /

ஐசிசியின் புதிய விதிமுறையுடன் இன்று தொடங்குகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டி...!

ஐசிசியின் புதிய விதிமுறையுடன் இன்று தொடங்குகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டி...!

INDvsWI

INDvsWI

இந்தியா - மேற்கிநத்திய தீவுகள் அணி மோதும் முதல் டி20 போட்டி ஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்க உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற கோலி தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த இரு அணிகளும் டி20 போட்டியில் 14 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் இந்தியா 8 முறையும், மேற்கிந்திய தீவுகள் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

ஐசிசியின் புதிய விதிமுறைப்படி இனி நோபால்களை 3வது நடுவர்களே கவனிப்பார்கள். நோ பால்களில் வீரர்கள் அவுட்டாகமல் இருக்க ஐசிசி இந்த புதிய விதியை அமல்படுத்தி உள்ளது.

ஐசிசியின் புதிய விதிமுறைப்படி இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி இன்று மோத உள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: India vs west indies

அடுத்த செய்தி