Home /News /sports /

கோலி டக், ரோஹித் சர்மா 13, ஒரே ஓவரில் காலி, ஷிகர் தவான் ‘ஜம்ப்பிங்’தவான் ஆகி அவுட்

கோலி டக், ரோஹித் சர்மா 13, ஒரே ஓவரில் காலி, ஷிகர் தவான் ‘ஜம்ப்பிங்’தவான் ஆகி அவுட்

ஒரே ஓவரில் ரோஹித், கோலியை வீட்டுக்கு அனுப்பிய ஜோசப்

ஒரே ஓவரில் ரோஹித், கோலியை வீட்டுக்கு அனுப்பிய ஜோசப்

அகமதாபாத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி படுமோசமாகத் தொடங்கியுள்ளது, ரோஹித் சர்மா (13), விராட் கோலி (0), ஷிகர் தவான் (10) ஆகியோர் ஆட்டமிழந்து பெவிலியன் சென்றனர். 10 ஓவர்கள் முடிவில் 42/3 என்று ஆனது இந்திய அணி.

மேலும் படிக்கவும் ...

    ரோஹித் சர்மா 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்தார், ஆனால் அல்ஜாரி ஜோசப் பந்து ஒன்றை பெரிய கவர் ட்ரைவ் ஆட முயன்றார், பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது.

    அடுத்ததாக கிங் கோலி இறங்கினார், ஒரு பந்து ஷார்ட் ஆஃப் லெந்தில் பிட்ச் ஆகி வெளியே சென்றது. ஆடாமல் விட்டார் கோலி. ஆனால் அடுத்த பந்துக்கு வழக்கத்துக்கு மாறாக ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்தார். பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது ஒன்று ஆடாமல் விட்டிருக்கலாம் அல்லது சுலபமாக பவுண்டரிக்கு அனுப்பியிருக்க வேண்டிய பந்து. அவரும் அதைத்தான் செய்யப்பார்த்தார். ஆனால் எட்ஜ் எடுத்து விக்கெட் கீப்பர் ஷேய் ஹோப்பிடம் கேட்ச் ஆனது, கோலி டக் அவுட் ஆனார்.

    உடனேயே ஷிகர் தவானும் ரோச்சிடம் ஆட்டமிழந்திருப்பார், பின் கால்காப்பில் வாங்கினார், ஆனால் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே என்பதால் தப்பினார். ஒழுங்காக டிபன்ஸ் ஆட முடியாமல் அடிக்கடி டவுன் த ட்ராக் வந்தார், ஒருவேளை ரிஷப் பண்ட்டுடன் டிபன் சாப்பிட்டிருப்பாரோ என்னவோ? இறங்கி வர வர லெந்த் குட்டையாகி குட்டையாகி பந்துகள் எழும்ப எழும்ப தவானும் ஜம்ப் செய்து கொண்டே இருந்தார். ஆனால் ஒருமுறை நடந்து வந்து ரோச் பந்தை தூக்கி எக்ஸ்ட்ராகவரில் சிக்ஸ் அடித்தார்.

    அது ஒன்றுதான் அவருக்கு மாட்டிய ஸ்ட்ரோக், மற்றபடி மட்டை கையில் இருந்து என்ன பயன்? கடைசியில் ஓடியன் ஸ்மித் பந்து ஒன்று ஷார்ட் மற்றும் வைடு ஆனால் பவுன்ஸ் கூடுதல் அதை கட் செய்ய முயன்று எட்ஜ் ஆகி வெளியேறினார், 10 ரன்கள்.

    தற்போது ஷ்ரேயஸ் அய்யர் 16 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 9 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. அல்ஜாரி ஜோசப் 4 ஓவர் 15 ரன் 2 விக்கெட், ஓடியன் ஸ்மித் 3 ஓவர் 13 ரன் 1 விக்கெட். இந்திய அணி இதுவரை 6 பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ind vs WI ODI, India vs west indies, Rohit sharma, Shikhar dhawan, Virat Kohli

    அடுத்த செய்தி