Home /News /sports /

தம்பி! இப்படியெல்லாம் அவுட் ஆனா வீட்டுக்கு அனுப்பிச்சுருவாங்க- ஷுப்மன் கில்லை கண்டிக்கும் முன்னாள் வீரர்

தம்பி! இப்படியெல்லாம் அவுட் ஆனா வீட்டுக்கு அனுப்பிச்சுருவாங்க- ஷுப்மன் கில்லை கண்டிக்கும் முன்னாள் வீரர்

ஷப்மன் கில்

ஷப்மன் கில்

இந்திய வீரர் ஷுப்மன் கில் மிகப்பிரமாதமான திறமை வாய்ந்தவர்தான் ஆனால் வாய்ப்புகளை சரிவரப் பயன்படுத்திக் கொள்வதில்லை, அபத்தமாக அவுட் ஆகிறார். ஒருநாள் போட்டிகளில் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் அதை ஒரு சதமாக பெரிய ஸ்கோராக மாற்றவில்லை, மாறாக ரன் அவுட், காட் அண்ட் பவுல்டு என்று அவுட் ஆனார். இதனையடுத்து முன்னாள் வீரர் பிரக்யன் ஓஜா, ஷுப்மன் கில் இப்படியெல்லாம் அவுட் ஆனா அவ்வளவுதான் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    கிரெக் சாப்பல், ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவில் ஆடுவதைப் பார்த்து மகத்துவத்துகான வீரர் என்றார். ஐபிஎல் 2022 தொடரில் 16 போட்டிகளில் 483 ரன்களை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் முதல் ஒருநாள் போட்டியில் அரைசதமும் 2வது போட்டியில் 43 ரன்களையும் எடுத்தார், ஆனால் இந்த ஸ்கோரில் அவுட் ஆனார், இது போதாது என்கிறார் பிராக்யன் ஓஜா.

    ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் அவர் கூறும்போது, “3 மேட்ச்கள் வாய்ப்பிருக்கிறது. முதல் 2 போட்டிகளில் அவர் எப்படி அவுட் ஆனார் என்பதைப் பார்த்தீர்களா? இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நன்றாகத் தொடங்குகிறார் பிறகு கோட்டை விட்டு விடுகிறார்.

    இவர் ஏற்கெனவே 3வது சாய்ஸ் ஓப்பனர் கிடையாது, 4 அல்லது 5வது சாய்ஸ் ஓப்பனராகவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் பார்க்கப்படுகிறார். பெரிய ரன்களை எடுக்க வேண்டாமா? முதல் போட்டியில் ரன் அவுட் ஆனார், 2வது போட்டியில் காட் அண்ட் பவுல்டு ஆனார்.

    இது தேவையற்றது, தனக்கு கிடைத்த வாய்ப்புகள் பொன்னானது என்பதை அவர் உணரவில்லை. சஞ்சு சாம்சனை எடுத்துக் கொள்ளுங்கள். இவருக்கு சில வாய்ப்புகளே கிடைக்கின்றன. கே.எல்.ராகுல் பிட் ஆகிவிட்டால் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே வாய்ப்புக் கிடைத்தால் இரு கைகளாலும் அள்ளிக்கொள்ள வேண்டாமா?” என்றார்.

    2வது ஒருநாள் போட்டியில் தேவையில்லாமல் தில்ஸ்கூப் ஆடுகிறேன் என்று காட் அண்ட் பவுல்டு ஆனார் ஷுப்மன் கில் இதைத்தான் சொல்கிறார் பிராக்யன் ஓஜா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs west indies, Shubman Gill

    அடுத்த செய்தி