முகப்பு /செய்தி /விளையாட்டு / 17 ஆண்டுகால தோனியின் சாதனையை உடைத்த அக்சர் படேல் -வீடியோ

17 ஆண்டுகால தோனியின் சாதனையை உடைத்த அக்சர் படேல் -வீடியோ

அக்சர் படேல் -தோனி

அக்சர் படேல் -தோனி

பதட்டமான கடைசி ஓவர் த்ரில்லரில் இந்தியாவுக்கான வெற்றியை அக்சர் படேல் மிகப்பெரிய சிக்ஸர் மூலம் பெற்றுத் தந்தார். இதன் மூலம் MS தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

  • Last Updated :

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் பதட்டமான கடைசி ஓவர் த்ரில்லரில் இந்தியாவுக்கான வெற்றியை அக்சர் படேல் மிகப்பெரிய சிக்ஸர் மூலம் பெற்றுத் தந்தார். இதன் மூலம் MS தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

கடைசி 10 ஒவர்களில் இன்னும் 5 விக்கெட்டுகளே மீதமிருந்த நிலையிலிருந்து 7ம் நிலையில் இறக்கிய அக்சர் படேல் 35 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்து அட்டகாச பினிஷிங் செய்தார் அக்சர் படேல். அக்சர் படேல் நேற்று சிக்சர் படேல் ஆனார்.

இதன் மூலம் இலக்கை விரட்டும் போது 7ம் நிலையில் இறங்கும் இந்திய வீரர் ஒருவர் அடிக்கும் அதிகபட்ச சிக்சர்கள் எண்ணிக்கையில் அக்சர் படேல் 2005ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோனி செய்த சாதனையை அக்சர் முறியடித்தார்.

அதாவது தோனி 3 சிக்சர்களை மட்டுமே அடித்தார் அப்போது இதே டவுனில் இறங்கி, இப்போது அக்சர் படேல் அதே 7வது டவுனில் இறங்கி 5 சிக்சர்களை அடித்து தோனி சாதனையைக் காலி செய்துள்ளார்.

இதற்கு முன்பு அதிரடி மன்னன், அட்டகாச பினிஷர், தோனியினால் அனாவசியமாக ஒழித்துக் கட்டப்பட்ட ஆல்ரவுண்டர் யூசுப் பத்தான் இருமுறை இதே டவுனில் இறங்கி 3 சிக்சர்களை அடித்து தோனியை சமன் செய்துள்ளார்.

யூசுப் பத்தான் இந்த சாதனையை தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்துக்கு எதிராகச் செய்தார். தன் ஆட்டம் குறித்து அக்சர் படேல் பிற்பாடு கூறுகையில், “இது சிறப்பான இன்னிங்ஸ், முக்கியமான தருணத்தில் வந்தது. இது அணியை தொடரை வெல்ல உதவியது என்பது முக்கியம்.

ஐபில் இப்படி ஆடி வெற்றி பெறச் செய்துள்ளோம். அமைதியாக இருந்து கொண்டு தீவிரத்தை கூட்ட வேண்டும் அவ்வளவே. நான் 5 ஆண்டுகளுக்குப்பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறேன். தொடர்ந்து இப்படி ஆட விரும்புகிறேன்” என்றார் அக்சர் படேல்.

First published:

Tags: Axar patel, Dhoni, India vs west indies, MS Dhoni