மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கோண்ட இந்திய அணி தொடரை 2-0 என்று கைப்பற்றியது, ஆனால் முதல் போட்டியை வென்ற பிறகு இந்திய அணியின் ஓய்வறைக்கு திடீர் வருகை தந்து அசத்தினார் மே.இ.தீவுகள் லெஜண்ட் பிரையன் லாரா.
இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பிறகு இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமிற்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா, கேப்டன் தவான் உள்ளிட்ட இந்திய வீரர்களை வாழ்த்தினார்.
Look who came visiting the #TeamIndia dressing room 👏 👏
The legendary Brian Charles Lara! 👍 👍#WIvIND | @BrianLara pic.twitter.com/ogjJkJ2m4q
— BCCI (@BCCI) July 23, 2022
பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்திய அணி வீரர்களை சந்திக்க பிரையன் லாரா வந்தார். லாரா தனது பெரும்பாலான நேரத்தை இந்திய கேப்டன் ஷிகர் தவான் மற்றும் யுஸ்வேந்திர சாஹலுடன் செலவிட்டார். இந்த போட்டியில் அரை சதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயருடனும் லாரா சிறிது நேரம் உரையாடினார். 15 நிமிடங்கள் வரை இந்திய வீரர்களுடன் உரையாடிய அவரை, முதன் முதலாக பார்த்தும் கேப்டன் ஷிகர் தவான் கட்டியணைத்து வரவேற்றார்.
வீரர்களுடனான உரையாடலுக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட்டை சந்தித்தார் லாரா.
முதல் 2 ஒருநாள் போட்டிகளையும் இந்தியா வென்ற நிலையில் தொடரை 2-0 என்று ஷிகர் தவான் தலைமை இந்திய அணி கைப்பற்றியது, சம்பிரதாய 3வது ஒருநாள் போட்டி இன்னமும் மீதமுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.