Home /News /sports /

அக்சர் படேலின் சாதனை அதிரடி அரைசதம்: த்ரில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது

அக்சர் படேலின் சாதனை அதிரடி அரைசதம்: த்ரில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது

ஆட்ட நாயகன் அக்சர் படேல்

ஆட்ட நாயகன் அக்சர் படேல்

மே.இ.தீவுகளுக்கு எதிராக நேற்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஷேய் ஹோப் (115), நிகலஸ் பூரன் (74) ஆகியோரது அற்புதமான பேட்டிங்கினால் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய இந்திய அணியில் கடைசியில அக்சர் படேல் 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 64 ரன்கள் வெளுத்துக் கட்ட இந்திய அணி 49.4 ஓவர்களில் 312/8 என்று அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று வென்றது.

மேலும் படிக்கவும் ...
    மே.இ.தீவுகளுக்கு எதிராக நேற்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஷேய் ஹோப் (115), நிகலஸ் பூரன் (74) ஆகியோரது அற்புதமான பேட்டிங்கினால் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய இந்திய அணியில் கடைசியில அக்சர் படேல் 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 64 ரன்கள் வெளுத்துக் கட்ட இந்திய அணி 49.4 ஓவர்களில் 312/8 என்று அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று வென்றது.

    அக்சர் படேல் 2வது இந்திய அதிவேக ஒருநாள் அரைசதம் விளாசினார். இதனால் ஷேய் ஹோப் தன் 100வது ஒருநாள் போட்டியில் சதம் எடுத்ததும், கேப்டன் நிகோலஸ் பூரன் 6 சிச்கரக்ளுடன் எடுத்த 74 ரன்களும் வீணானது, அதாவது வெஸ்ட் இண்டீஸ் தோல்வியைத் தவிர்க்க போதுமானதாக இல்லை.

    சேசிங்கில் இந்தியாவுக்கு ஒரு கட்டத்தில் 10 ஓவர்களில் 100 ரன்கள் தேவிப்பட்டது. 5 விக்கெட்டுகள் கையில் இருந்தன, ஆனால் இரண்டு அதிரடி வீரர்களான அக்சர் படேல், தீபக் ஹூடா களத்தில் இருந்தனர்.தீபக் ஹூடா 36 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் பங்களிப்பு செய்து ஹுசைன் பந்தில் வெளியேறும்போது இந்தியாவுக்கு 36 பந்துகளில் 56 ரன்கள் தேவை என்று இருந்தது. அக்சர் படேல் ஏற்கெனவே 3 சிக்சர்களை விளாசி அபாயகரமாகத் திகழ்ந்தார்.

    ஆட்டம் எப்போது இந்தியா பக்கம் திரும்பியது எனில் கடைசி 5 ஓவர்களில் 48 தேவை எனும்போது அல்ஜாரி ஜோசப் 16 ரன்களை ஒரு ஓவரில் விட்டுக் கொடுத்தார், ஷர்துல் தாக்கூர் 3 ரன்களில் ஆட்டமிழந்த போதும் அக்சர் ஆவேசம் அடங்கவில்லை இவர் 2 பவுண்டரிகளையும் ஆவேஷ் கான் ஒரு பவுண்டரியையும் அடிக்க 18 பந்துகளில்ல் 19 என்று ஆனது, வெஸ்ட் இண்டீஸ் அணி ஆவேஷ் கானை இதற்கு முதல் ஓவர் கடைசி பந்தில் ரன் அவுட் செய்யாமல் தவற விட்டது.

    ஆவேஷ் கான் 12 பந்தில் 10, அக்சர் படேல், கைல் மேயர்ஸ் பந்தை தூக்கி நேராக அடித்து 2 பந்துகள் மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெறச்செய்தார்.

    முன்னதாக ஷிகர் தவான் செம தடவு தடவி 31 பந்தில் வெறும் 13 ரன்கள் எடுத்து அப்பர் கட் ஷாட்டில் மேயர்ஸின் அபார கேட்சுக்கு வெளியேறினார். ஆனால் இன்னொரு முனையில் ஷுப்மன் கில் அபாரமாக ஆடினார். 49 பந்துகளில் 43 விளாசி மேயர்ஸ் பந்தை ‘தில்ஸ்கூப்’ ஆடப்போய் பவுலரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார்.

    பிறகு ஷ்ரேயஸ் அய்யர் ( 71 பந்தில் 63, 5 பவுண்டரி 1 சிக்ஸ்), சஞ்சு சாம்சன் (51 பந்தில் 54, 3 பவுண்டரி 3 சிக்ஸ்) சேர்ந்து 99 ரன்கள் சேர்த்தனர். சூரியகுமார் யாதவ் மீண்டும் சொதப்பினார். அய்யர் முதல் 33 பந்தில் 19 ரன்கள்தான் எடுத்தார் ஆனால் அடுத்த 38 பந்தில் 44 ரன்கள் எடுத்தார், மாறாக சஞ்சு சாம்சன் ஸ்பின்னர்களை லாங் ஆஃப் திசையில் அடித்த சிக்ஸ் கொள்ளை அழகு ரகம்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னதாக ஷேய் ஹோப் பிரமாதமாக ஆடி தன் 100வது ஒருநாள் போட்டியில் சதம் கண்ட பெருமை கண்டார். 135 பந்துகள் ஆடி 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்தார், முதல் பிரேக் த்ரூவாக தீபக் ஹூடா கைல் மேயர்ஸ் (39) விக்கெட்டை வீழ்த்தினார். ஷம்ரா புரூக்ஸ் 35 எடுத்து அக்சர் படேல் வீசிய அருமையாக திரும்பிய பந்துக்கு ஸ்லிப்பில் தவானிடம் கேட்ச் ஆனார், தவானின் களவியூகம், பந்து வீச்சு மாற்றம் அருமை, ஆனால் அர்ஷ்தீப் சிங்கை எதற்கு உட்கார வைக்கிறார்கள் என்று புரியவில்லை. ஆவேஷ் கானை போட்டு பின்னி எடுத்து விட்டனர். அவர் 6 ஓவர்களி 54 ரன்களை விட்டுக் கொடுக்க ஷர்துல் தாக்கூர் ஒருநாள், டி20 போட்டிகளில் இனி ஆடுவது கடினம் என்பதற்கு ஏற்ப 7 ஓவர்களில் 54 ரன்கள் விளாசப்பட்டார்.

    பிராண்டன் கிங் ஸ்லாக் ஸ்வீப் ஆடப்போய் டாப் எட்ஜில் ஷிகர் தவான் கேட்சுக்கு டக் அவுட் ஆனார். செஹல் விக்கெட். ஷர்துல் தாக்கூர், சாத்து வாங்கினாலும் ஷேய் ஹோப், பூரன், ரோவ்மன் போவெல் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். செஹல் சோபிக்கவில்லை 9 ஒவர் 69 ரன்கள் 1 விக்கெட், அக்சர் படேல், தீபக் ஹுடா டைட்டாக வீசினர், இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் 311/6 என்று நல்ல இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணி அதை அக்சர் படேலின் அபார அதிரடியில் விரட்டி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் அக்சர் படேல்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs west indies, West Indies vs India

    அடுத்த செய்தி