Home /News /sports /

Ind vs WI 2nd ODI: இந்தியாவில் ‘கிங்’கோலியின் 100வது ஒருநாள் போட்டி - தோனி, சச்சினை விடவும் டாப்

Ind vs WI 2nd ODI: இந்தியாவில் ‘கிங்’கோலியின் 100வது ஒருநாள் போட்டி - தோனி, சச்சினை விடவும் டாப்

இருமேதைகள், சச்சின், கோலி.

இருமேதைகள், சச்சின், கோலி.

இன்று இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி, கிங் விராட் கொலிக்கு ஒரு வரலாற்றுத் தருணமாகும், ஆம்! அவர் இந்திய மண்ணில் தன் 100வது ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

தனது புகழ்பெற்ற 13 ஆண்டுகால வாழ்க்கையில் உள்நாட்டில் 99 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள கோலி, இந்தியாவில் 100 போட்டிகளில் விளையாடும் மைல்கல்லை நிறைவு செய்யும் விளிம்பில் நிற்கிறார். அவர் சொந்த மண்ணில் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 36வது கிரிக்கெட் வீரராகவும், இந்தியாவில் இருந்து ஐந்தாவது வீரராகவும் ஆவார், வரலாற்று பட்டியலில் புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி போன்றவர்களுடன் இணைகிறார்.

99 ஒருநாள் போட்டிகளில், கோஹ்லி 96 இன்னிங்ஸில் 59.64 சராசரியில் 19 சதங்கள் மற்றும் 25 அரை சதங்களுடன் 5002 ரன்களைக் குவித்துள்ளார். எனவே, விளையாட்டின் 100வது சாதனைக்கு முன்னதாக விளையாட்டு கண்ட மாவீரர்களில் ஒருவராக கோலி திகழ்கிறார்.

சொந்த மண்ணில் 99 ஒருநாள் போட்டிகளில் ரன் மெஷினாக கோஹ்லி சாதித்ததை யாரும் நெருங்கவில்லை, ஏனெனில் அவர் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிக ரன்களில் முதலிடத்தில் இருக்கிறார். பட்டியலில் அடுத்த சிறந்த வீரர் சச்சின், இந்தியாவில் தனது 99வது ஒருநாள் போட்டியில் 4231 ரன்களை குவித்திருந்தார். ஆஸியின் சிறந்த மற்றும் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூட சொந்த மண்ணில் தனது முதல் 99 போட்டிகளில் 3497 ரன்களை குவித்த தனித்துவமான பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார்.



சொந்த மண்ணில் 99 ODIகளுக்குப் பிறகு அனைத்து பேட்டர்களிலும் அதிக சதங்கள் அடித்த கோலி, 19 சதங்களை அடித்துள்ளார், இரண்டாவது இடத்தில் இருக்கும் சச்சின் 13 சதங்கள் அடித்துள்ளார்.

5002 ரன்கள் என்ற அவரது ரன் எண்ணிக்கையை பிரித்துப் பார்த்தால், கிட்டத்தட்ட 25 சதவீதம் - 1247 ரன்கள் - துல்லியமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 21 இன்னிங்ஸ்களில் 69.27 என்ற சராசரியில் ஐந்து சதங்களுடன் அடிக்கப்பட்டது. மொத்தத்தில் 24 சதவீதம் (1197 ரன்கள்) அவரது விருப்பமான எதிரணியில் மற்றொன்றானஆஸ்திரேலியாவுக்கு எதிராக 22 இன்னிங்ஸ்களில் 59.95 என்ற சராசரியில் இதே 5 சதங்களுடன் அடிக்கப்பட்டது.

இந்தத் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் விட்டேத்தியாக ஆடி 8 ரன்களில் அல்ஜாரி ஜோசப்பின் சரமாரி பவுன்சர்களில் ஒன்றில் ஆட்டமிழந்து வெளியேறினார். இன்று 100வது போட்டியில் எப்படி ஆடுகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Published by:Muthukumar
First published:

Tags: Ind vs WI ODI, India vs west indies, MS Dhoni, Sachin tendulkar, Virat Kohli

அடுத்த செய்தி