Home /News /sports /

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹெட்மையர்- இந்திய லெவன் என்ன?- இன்று முதல் டி20

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹெட்மையர்- இந்திய லெவன் என்ன?- இன்று முதல் டி20

ரிஷப் பண்ட்- கார்த்திக்

ரிஷப் பண்ட்- கார்த்திக்

மேற்கிந்திய தீவுகளின் தரூபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று இந்தியா- மே.இ.தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்த மைதானத்தில் நடக்கும் முதல் சர்வதேசப் போட்டியாகும் இது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷிம்ரன் ஹெட்மையர் திரும்பியிருப்பது அங்கு உற்சாகத்தை வரவழைத்துள்ளது, ஒருநாள் தொடரில் 3-0 என்று ஜெயித்தது போல் டி20-யில் முடியாது என்று நம்பலாம். ஆனால் மே.இ.தீவுகளில் ஸ்டார் கெய்ரன் பொலார்டு ஓய்வு பெற்று விட்டார், ஏனோ மே.இ.தீவுகள் வாரியம் ஆந்த்ரே ரஸல் மற்றும் சுனில் நரைனுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை. நிகோலஸ் பூரன் தான் டி20 அணிக்கும் கேப்டன்.

பண்ட், ரோஹித் ஓபனிங்:

ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா கடந்த 2 டி20 போட்டிகளில் ஓப்பனிங் இறங்கினர். இதில் 1, 26 என்ற ஸ்கோரைத்தான் ரிஷப் பண்ட் அடித்தார். அல்லது இஷான் கிஷனை இறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தினேஷ் கார்த்திக் ஸ்பெஷலிஸ்ட் பினிஷராக அணியில் இருப்பார்.

சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் கொண்ட மிடில் ஆர்டரில் ஷ்ரேயஸ் அய்யருக்குப் பதில் நிச்சயம் தீபக் ஹூடாதான் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். அய்யர் வேகப்பந்து வீச்சுக்கு தடுமாறுகிறார், ஹூடா, சூரியகுமார் ஸ்பின் வேகம் இரண்டையுமே லாவகமாக கையாள்கின்றனர்.

அதே போல் ஜடேஜாவா அக்சர் படேலா என்பதும் கேள்வியாகியுள்ளது, அன்று அக்சர் படேல் வெளுத்துக் கட்டி அரைசதம் விளாசி கிட்டத்தட்ட வெல்ல முடியாஅ நிலையிலிருந்து வெல்லவைத்தார், அதனால் அவரை எடுப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பின்னில் குல்தீப் யாதவ், அஸ்வினுக்கு வாய்ப்பு அதிகம். வேகப்பந்தில் ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார் உள்ளனர், இன்னொரு வேகமாக ஆவேஷ் கான் அல்லது அர்ஷ்தீப் சிங் இருக்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் லெவன்: கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், நிகலஸ் பூரன் (கேப். வி.கீ), ஹெட்மையர், ரோவ்மென் போவெல், ஜேசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், அல்ஜாரி ஜோசப், அகீல் ஹுசைன், ஆபெட் மெக்காய், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.

இந்திய உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஜடேஜா, ஹர்ஷல் படேல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்
Published by:Muthukumar
First published:

Tags: India vs Westindies, Rohit sharma, T20

அடுத்த செய்தி