ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தினேஷ் கார்த்திக்கின் பினிஷிங் அதிரடி, அபார ஸ்பின் பவுலிங்கில் இந்தியா வெற்றி

தினேஷ் கார்த்திக்கின் பினிஷிங் அதிரடி, அபார ஸ்பின் பவுலிங்கில் இந்தியா வெற்றி

ஆட்ட நாயகன் தினேஷ் கார்த்திக், அஸ்வின்

ஆட்ட நாயகன் தினேஷ் கார்த்திக், அஸ்வின்

தரூபா, பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை பந்தாடியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று ரோஹித் சர்மா படை முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தரூபா, பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை பந்தாடியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று ரோஹித் சர்மா படை முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்த மேற்கிந்திய தீவுகள் 16வது ஓவர் வரை கட்டுப்பாட்டில்தான் இருந்தது 138/6 என்றே இந்திய அணி 16வது ஓவரில் இருந்தது, ஆனால் அதன் பிறகு கார்த்திக் 19 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர் என்று அதிரடி பினிஷிங் டச் கொடுக்க, அவருடன் அஸ்வின் 13 நாட் அவுட், இருவரும் சேர்ந்து கடைசி 4 ஓவர்களில் 52 ரன்களை சேர்த்தனர். இந்திய அணி 190/6 என்று முடிந்தது, தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷம்ரா புரூக்ஸ் மட்டுமே 20 ரன்களை அதிகபட்சமாக எடுக்க அந்த அணி அஸ்வின் (2/22), ரவி பிஷ்னாய் (2/26), அர்ஸ்தீப் சிங் (2/24) என்ரு அசத்த 122/8 என்று படுதோல்வி அடைந்தது.

படு ஸ்லோவான பிட்சில் முன்னதாக ரோஹித் சர்மா ஆச்சரியகரமாக தன்னுடன் சூரியகுமார் யாதவை தொடக்கத்தில் இறக்கினார், அவரு இடது கை வேகப்பந்து வீச்சாளர், ஓபெட் மெக்காய் மற்றும் ஜேசன் ஹோல்டரை 2 பவுண்டரிகளை சடுதியில் அடித்தார். ஆனால் இவர் அடித்த ஷாட்டில் பிரமிப்பூட்டியது ஜோசப்பின் யார்க்கர் லெந்த் பந்தை டிவில்லியர்ஸ் பாணியில் ஸ்கொயர் லெக் மேல் அடித்த சிக்ஸ் உண்மையில் திகைக்க வைத்தது.

ஆனால் இடது கை ஸ்பின்னர் அகீல் ஹுசைன், சூரியகுமார் யாதவை படுத்தி எடுத்தார், 2 பந்துகளில் 2 கேட்ச் வாய்ப்பு இரண்டுமே விரயமானது. கடைசியில் சூரியா 24 ரன்களில் இருந்த போது அகீல் ஹுசைன் பந்தை லெக் திசையில் அடிக்கப்போய் எட்ஜ் ஆகி பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஷ்ரேயஸ் அய்யர் ஓபெட் மெக்காய் பந்தை எட்ஜ் செய்து டக் அவுட் ஆனார். ரிஷப் பண்ட்டும் திணறினார், ரோஹித் சர்மாவும் ஸ்லோ களத்தில் டைமிங்குக்குத் திணறினாலும் ஹோல்டரை அடித்த சிக்ஸரும் பிறகு ஓடியன் ஸ்மித்தை அடித்த சிக்சரும் அபாரம். ரிஷப் பண்ட் இரண்டு பவுண்டரிகளை கனெக்ட் செய்ய இருவரும் 43 ரன்களை 25 பந்துகளில் சேர்த்தனர்.

ரிஷப் பண்ட் 14 பந்துகளில் கீமோ பாலிடமும், ஹர்திக் பாண்டியா 1 ரன்னில் ஜோசப்பிடமும் சடுதியில் வெளியேற இந்திய அணி 12வது ஓவரில் 102/4 என்று இருந்தது. இடையில் பொறுப்புடன் ஆடிய ரோஹித் சர்மா தனது 27வது டி20 சதத்தை 35 பந்துகளில் எடுத்தார். 64 ரன்களில் ரோஹித் சர்மா ஹோல்டரின் பந்தை ஸ்வீப்பர் கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜடேஜா 16 ரன்களில் கீமோ பால் பந்தில் வெளியேற இந்திய அணி 16 ஓவர்களில் 138/6. இது தினேஷ் கார்த்திக் தன் வாண வேடிக்கைகளைக் காட்ட நல்ல நடைமேடையாக அமைந்தது.

அதன் பிறகு கிரீசை நன்றாக உபயோகித்த தினேஷ் கார்த்திக் பவுலர்களின் லைன் அண்ட் லெந்த்தைக் காலி செய்து 19 பந்துகளில் 4 பவுண்டரி 2 அற்புத சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அஸ்வின் 13 நாட் அவுட் இந்தியா 190 ரன்கள்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 2 பவுண்டரி ஒரு சிக்ஸ் என்று 6 பந்தில் 15 என்று ஒரு ஸ்டார்ட் கொடுத்தார், புவனேஷ்வர் குமாரின் ஒரே ஓவரில் 11 பிறகு அர்ஸ்தீப் சிங்கின் ஒரே ஓவரில் 11 ரன்கள் என்று வேகமாகத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மேயர்ஸை அர்ஸ்தீப் சிங்கிடமும், ஷம்ரா புரூக்ஸ் (20) விக்கெட்டை புவனேஷ்வர் குமாரிடமும் இழக்க, ஒன் டவுன் வந்த ஜேசன் ஹோல்டரை ஜடேஜா டக்கில் பவுல்டு செய்தார்.

அஸ்வின் அபாரமாக வீசி நிகோலஸ் பூரன் (18), ஷிம்ரன் ஹெட்மையர் (14) ஆகிய இடது கை வீரர்களை பெவிலியனுக்கு அனுப்ப, ரவி பிஷ்னாய், ரோவ்மென் போவெல் (14), ஓடியன் ஸ்மித் (0) ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் வீட்டுக்கு அனுப்ப, அகீல் ஹுசைன் (11) விக்கெட்டை அர்ஸ்தீப் சிங் பவுல்டு செய்து வீழ்த்தினார். கீமோ பால் 19, ஜோசப் 5 நாட் அவுட் என்று இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் 122/8 என்று முடிந்தது. ஆட்ட நாயகன் தினேஷ் கார்த்திக்.

First published:

Tags: Dinesh Karthik, India captain Rohit Sharma, India vs west indies, R Ashwin