இந்தூரில் இந்திய அணி அபார வெற்றி..!

India vs Srilanka | லோகேஷ் ராகுல் 45 ரன்களும், ஷிகர் தவன் 32 ரன்களும் அடித்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

இந்தூரில் இந்திய அணி அபார வெற்றி..!
INDvsSL
  • Share this:
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகளை கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், 2வது போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் குணதிலகா 20 ரன்களும், அவிஷ்கா ஃபெர்ணான்டோ 22 ரன்களும் சேர்த்தனர். பின்னர் வந்த வீரர்களில் குசால் பெரேராவை தவிர எஞ்சிய வீரர்கள், இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், நவ்தீவ் சைனி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து இலக்கை துரத்திய இந்திய அணியில், லோகேஷ் ராகுல் 45 ரன்களும், ஷிகர் தவன் 32 ரன்களும் அடித்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலியின் அதிரடியால் இந்தியா வெற்றியை நோக்கி பயணித்தது.

இறுதியாக 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 144 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என தொடரை முன்னிலையை எட்டியது.  இந்த 4 ஓவர்கள் வீசி, 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுது 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் நவ்தீவ் சைனி ஆட்டநாயகனாக தேர்வானார். இந்தியா - இலங்கை இடையே 3-வது மற்றும் கடைசிப் போட்டி புனேயில் வருகின்ற 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
First published: January 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading