ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

India vs Srilanka T20 : சூர்ய குமார் அதிரடி சதம்… 3ஆவது டி20-யில் இந்திய அணி 228 ரன்கள் குவிப்பு

India vs Srilanka T20 : சூர்ய குமார் அதிரடி சதம்… 3ஆவது டி20-யில் இந்திய அணி 228 ரன்கள் குவிப்பு

பந்தை பவுண்டரிக்கு விளாசும் சூர்யகுமார்

பந்தை பவுண்டரிக்கு விளாசும் சூர்யகுமார்

சுப்மன் கில்-சூர்யகுமார் இருவரும் 3ஆவது விக்கெட்டிற்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், ராகுல் திரிபாதியின் அதிரடி ஆட்டத்தால் இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்துள்ளது. மைதானத்திற்குள் வந்தது முதலே அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். 2ஆவது டி20 போட்டியில் இடம்பெற்ற அதே வீரர்களுடன் மாற்றம் ஏதுமின்றி இந்திய அணி விளையாடி வருகிறது.

தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். 1 ரன் எடுத்திருந்தபோது தில்சன் மதுசனகா பந்துவீச்சில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து இஷான் வெளியேறினார். இதன் பின்னர் இணைந்த கில் – ராகுல் திரிபாதி இணை எந்த நெருக்கடியும் இல்லாமல் அதிரடியாக ரன்களை சேர்த்தது. 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் ராகுல் திரிபாதி 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

கில் – திரிபாதி இணை 2ஆவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதையடுத்து கில் – சூர்யகுமார் ஜோடி இணைந்து, இலங்கையின் பந்துவீச்சை சிதறடித்தது. ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர்கள் பறந்ததால், இலங்கை பவுலர்கள் நிலை குலைந்தனர். இந்த ஜோடியை 15 ஆவது ஓவரில்தான் இலங்கை பவுலர்களால் பிரிக்க முடிந்தது.

36 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 46 ரன்கள் சேர்த்த சுப்மன் கில் ஹசரங்கா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். கில்-சூர்யகுமார் இருவரும் 3ஆவது விக்கெட்டிற்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அடுத்துவந்த ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா ஆகியோர் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இதன்பின்னர் இணைந்த சூர்யகுமார் – அக்சர் படேல் ஜோடி இலங்கை பந்துவீச்சை சிதறடித்தது.

இதற்கிடையே, சூர்ய குமார் யாதவ் சதத்தை கடந்து அசத்தினார். 51 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 சிக்சர் 7 பவுண்டரியுடன் 112 ரன்களை எடுத்தார். அவருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் கொடுத்த அக்சர் படேல் 9 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 228 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

First published:

Tags: Cricket, India vs srilanka