ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இலங்கைக்கு எதிரான தொடரை வெல்லுமா இந்திய அணி… புனேயில் நாளை நடைபெறுகிறது 2ஆவது டி20….

இலங்கைக்கு எதிரான தொடரை வெல்லுமா இந்திய அணி… புனேயில் நாளை நடைபெறுகிறது 2ஆவது டி20….

இந்திய அணி

இந்திய அணி

எளிதாக வெல்ல வேண்டிய முதல் மேட்ச்சை இந்திய அணி பதற்றமான கட்டத்திற்கு அழைத்து சென்று விட்டது என்ற விமர்சனங்களும் எழுந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த போட்டி புனே மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது. சற்று பலவீனமான இலங்கை அணியிடம், இந்திய அணி தடுமாற்றத்துடனேயே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 2ஆவது போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

முதல் போட்டியில் இந்திய பவுலர் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்தார். தீபக் ஹூடா, அக்சர் படேல் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் அற்புதமாக அமைந்தது. வேகத்தில் மிரட்டிய உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவின் விக்கெட் முக்கியமான ஒன்று. இந்த விக்கெட் ஆட்டத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

இப்படி முதல் போட்டியில் பாசிடிவான விஷயங்கள் இருந்தாலும் பேட்டிங்கில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரும் ஏமாற்றத்தை அளித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

இலங்கை அணியின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும், கடைசி ஓவர்களில் அதிரடியாக அவர்கள் விளையாடியது போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது.

ஒரு பந்தில் 4 ரன் எடுக்க வேண்டும் என, மேட்ச்சின் கடைசிப் பந்து வரையில் பரபரப்பு காணப்பட்டது. எளிதாக வெல்ல வேண்டிய மேட்ச்சை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணி பதற்றமான கட்டத்திற்கு அழைத்து சென்று விட்டது என்ற விமர்சனங்களும் எழுந்தன.

‘ஐபிஎல்-யை விட உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானது’ – கவுதம் காம்பீர்

முதல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் காயம் காரணமாக நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'உலகக்கோப்பை தொடருக்காக இளம் வீரர்களை தயார்படுத்த வேண்டும்' - கபில்தேவ் வலியுறுத்தல்

இந்நிலையில் நாளைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: Cricket