ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா – இலங்கை டி20 கிரிக்கெட் தொடர்… நேரலையாக எதில் பார்க்கலாம்? முழு விபரம் இதோ…

இந்தியா – இலங்கை டி20 கிரிக்கெட் தொடர்… நேரலையாக எதில் பார்க்கலாம்? முழு விபரம் இதோ…

ஹர்திக் பாண்ட்யா - தசுன் ஷனகா

ஹர்திக் பாண்ட்யா - தசுன் ஷனகா

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டி மாலை 7 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. அதற்கு முன்பாக 6.30-க்கு டாஸ் போடப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நாளை மும்பையில் தொடங்குகிறது. மொத்தம் 3 போட்டிகளைக் கொண்டதாக இந்த தொடர் நடத்தப்படுகிறது. வங்கதேசத்துடன் உடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், டெஸ்டில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 2 டெஸ்டிலும் வெற்றியைத் தேடித் தந்தனர். இதையடுத்து இலங்கை அணியுடனான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியஅணி பங்கேற்கவுள்ளது.

அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 3ஆம் தேதி நாளை மும்பையிலும், இரண்டாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி புனேவிலும், கடைசி டி20 ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா மைதானத்திலும் நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும், துணைக் கேப்டனாக சூர்ய குமார் யாதவும் செயல்படுவார்கள். இவர்களை தவிர்த்து அணியில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக் , சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டி மாலை 7 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. அதற்கு முன்பாக 6.30-க்கு டாஸ் போடப்படும்.

‘எதிலும் வெற்றி பெற இந்த 4 ஃபார்முலாக்களை பின்பற்றுங்க…’ – கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆலோசனை

இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் டிவியில் நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது.

உலகக்கோப்பைக்கு வந்தால் ஐபிஎல் வேண்டாம்.. இந்திய வீரர்களுக்கு புது ரூல் போடும் பிசிசிஐ!

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த ஆட்டத்தை நேரலையாக கண்டு ரசிக்கலாம். இதையொட்டி அந்தந்த மாநில மொழிகளில் வர்ணனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

First published:

Tags: Cricket