இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் 1-1 என்று வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. மும்பையில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடா 23 பந்துகளில் 41 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவினார். ஷிவம் மாவி அந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
தொடர்ந்து புனேவில் நடைபெற்ற 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 207 ரன்களை சேஸ் செய்த இந்திய அணியில் அக்சர் படேல் 31 பந்துகள் 65 ரன்களை எடுத்து இறுதி ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அந்த போட்டியில் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இந்திய அணி தொடக்கத்திலேயே இழந்ததால் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் தொடர் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி களம் கண்டுள்ளது. கடந்த இரு போட்டியில் சோபிக்காத வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷதீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே இன்று வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை, தொடரை வெல்ல தீவிரம் காட்டும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Ind vs SL, Indian cricket team, Sri Lanka, T20