ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘உலகக்கோப்பையை வெல்வதுதான் புத்தாண்டில் எடுத்த தீர்மானம்!’ – ஹர்திக் பாண்ட்யா

‘உலகக்கோப்பையை வெல்வதுதான் புத்தாண்டில் எடுத்த தீர்மானம்!’ – ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு இந்திய அணி முழு முயற்சி மேற்கொள்ளும். இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி விரும்புகிறது. – ஹர்திக்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக கோப்பையை வெல்வதுதான் புத்தாண்டில் தான் எடுத்த தீர்மானம் என்று, டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார். இந்தியா -  இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கு மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா வகித்து வந்த கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்ட்யாவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் தொடர் குறித்து ஹர்திக் பாண்ட்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- உலக கோப்பையை வெல்வதுதான் இந்த புத்தாண்டில் நான் எடுத்திருக்கும் தீர்மானம். இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு இந்திய அணி முழு முயற்சி மேற்கொள்ளும். இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி விரும்புகிறது.

இந்திய அணி முன்னோக்கி செல்லும். சாதிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. நான் எதையும் சாதிக்கவில்லை. அடுத்தடுத்து உலக கோப்பை தொடர் வருகிறது. அவற்றை வெல்ல வேண்டும் என்பதுதான் இப்போது எனக்கு உள்ள இலக்கு. இந்தியாவை அவ்வளவு எளிதாக இலங்கை வீழ்த்திவிட முடியாது. ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி… நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்

இந்த படுதோல்வி இந்திய அணிக்கு எதிராக, கடும் விமர்சனங்கள் எழுவதற்கு வழிவகுத்தது. இன்னொரு பக்கம் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கோப்பையை வென்று அசத்தியது.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனை… விரைவில் அல் நஸ்ர் அணியில் விளையாடுகிறார்…

குஜராத் டைட்டன்ஸ் அணி, தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே கோப்பையை வென்று கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

First published:

Tags: Cricket