ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் சாமி தரிசனம்…

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் சாமி தரிசனம்…

சாமி தரிசனம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள்.

சாமி தரிசனம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள்.

முன்னதாக இதே கோயிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கே.எல். ராகுல் சாமி தரிசனம் செய்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் கோயிலில் வழிபட்டனர். பாரம்பரியமிக்க வெள்ளை வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து வீரர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. முன்னதாக இதே கோயிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கே.எல். ராகுல் சாமி தரிசனம் செய்தார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவது கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை திருவனந்தபுரம் கிரீன் ஃபீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

நாளை நடைபெறும் 3ஆவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த போட்டியை தொடர்ந்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த தொடர் ஜனவரி 18-ஆம் தேதி தொடங்குகிறது. முதலில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து ஜனவரி 27 ஆம் தேதி டி20 போட்டிகள் ஆரம்பமாகின்றன. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல், அக்சர் படேல் ஆகியோர் அணியில் இடம்பெற மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், KS பாரத் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது , ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக்.

ரிஷப் பந்த் மீண்டும் களத்திற்கு திரும்புவது எப்போது? புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ். , யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார்.

First published:

Tags: Cricket