ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

India vs Sri Lanka ODI : முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்…

India vs Sri Lanka ODI : முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்…

இந்தியா - இலங்கை அணியின் கேப்டன்கள்

இந்தியா - இலங்கை அணியின் கேப்டன்கள்

சுப்மன் கில், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஆகியோருக்கு முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் இந்த போட்டியில் இடம்பெறவில்லை. இதேபோன்று இலங்கை அணியிலும் சில மாற்றங்களை கேப்டன் தசுன் ஷனகா செய்துள்ளார். டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதைப் போன்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்ய குமார் யாதவ் ஒருநாள் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. டி20 தொடர் நாயகன் விருதுபெற்ற அக்சர் படேல் இன்று விளையாடுகிறார். உம்ரான் மாலிக்கை தவிர்த்து இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் செயல்படாததால், அவர் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார்.

பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் என 5 பேருடனும், ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் மற்றும் பவுலர்கள் முகமது ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக், சாஹல் ஆகியோருடன் இந்திய அணி களத்தில் இறங்கியுள்ளது.

இலங்கை அணியில் பதும் நிஸ்ஸங்கா, குசால் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா(கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, துனித் வெல்லலகே, கசுன் ராஜிதா, டில்ஷான் மதுஷங்கா ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

First published:

Tags: Cricket