ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விராட் கோலியின் சிக்சரை ரசித்துப் பார்த்த கேப்டன் ரோஹித்… கவனம்பெறும் ரியாக்சன் வீடியோ…

விராட் கோலியின் சிக்சரை ரசித்துப் பார்த்த கேப்டன் ரோஹித்… கவனம்பெறும் ரியாக்சன் வீடியோ…

விராட் கோலி - ரோஹித் சர்மா

விராட் கோலி - ரோஹித் சர்மா

நேற்று அடித்த சதத்தின் மூலம் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சினின் 2 சாதனைகளை தகர்த்துள்ளார் விராட் கோலி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அடித்த சிக்சரை, கேப்டன் ரோஹித் சர்மா ரசித்துப் பார்த்து கைத் தட்டினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று கவனம் பெற்று வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்கு விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்தார்.

நேற்று நடந்த இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை குவித்தது. விராட் கோலி சிறப்பாக விளையாடி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்தார். இவற்றில் 8 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த சிக்சர் ஒன்றை, கேப்டன் ரோஹித் சர்மா ரசித்துப் பார்த்து கைத் தட்டினார். இதுதொடர்பான வீடியோ கவனம் பெற்றுள்ளது.

' isDesktop="true" id="873801" youtubeid="yzBf0iQpWUc" category="cricket">

நேற்று அடித்த சதத்தின் மூலம் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சினின் 2 சாதனைகளை தகர்த்துள்ளார் விராட் கோலி. இந்தியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களை அடித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அதனை இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி , சச்சினின் சாதனையை சமன் செய்திருந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் சதம் விளாசி சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். உள்ளூரில் நடந்த சர்வதேச போட்டிகளில் 20 சதங்கள் அடிப்பதற்கு சச்சின் 160 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டார். இதனை 99 இன்னிங்ஸ்களிலேயே சமன் செய்த கோலி, தனது 101 ஆவது இன்னிங்ஸில் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஒரே அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட , அதிகபட்ச சதம் என்ற அடிப்படையில், சச்சினின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 சதங்களே சாதனையாக இருந்தது. இதனை இன்று நடந்த இலங்கைக்கு எதிரான சதத்தின் மூலம் கோலி முறியடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக கோலி இதுவரை 10 சதங்களை விளாசியுள்ளார்.

First published:

Tags: Cricket