ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்… போட்டியை டிவி, ஆன்லைனில் எப்படி பார்க்கலாம்?

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்… போட்டியை டிவி, ஆன்லைனில் எப்படி பார்க்கலாம்?

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

டி20 தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்திய அணி நாளை இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களம் இறங்குகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகிறது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணி இலங்கையை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது.

இந்திய அணியில் அக்சர் படேல், சூர்ய குமார் யாதவ், ஷிவம் மாவி, ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தினர். கேப்டனாக தனது முதல் அசைன்மென்ட்டை முடித்த உற்சாகத்தில் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். அவரை டி20 அணிக்கான நிரந்தர கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

நாளை இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். வங்கதேச தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற இஷான் கிஷன் இரட்டை சதத்தை எளிதாக அடித்து கவனம் ஈர்த்தார்.

அவர் நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மூத்த வீரர்கள் அணியில் இடம்பெறுவதால், ஆடும் லெவனை எப்படி கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்யப் போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

நாளை மதியம் 1.30 மணியளவில் இந்தியா – இலங்கை அணிகள் பங்கேற்கும் முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இதற்கு முன்பாக 1 மணியளவில் டாஸ் போடப்படும்.

‘சூர்ய குமார் போன்ற வீரர்கள் 100 ஆண்டுக்கு ஒருமுறை தான் கிடைப்பார்கள்’ – கபில் தேவ் பாராட்டு

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நேரலையாக போட்டியை பார்த்து மகிழலாம்.

இலங்கையுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் –  

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

First published:

Tags: Cricket