இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் செவ்வாயன்று தொடங்கவுள்ள நிலையில், கே.எல்.ராகுல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. கடந்த ஆண்டு, கே.எல்.ராகுலுக்கு குறிப்பிடும்படியாக அமையவில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் அவர் ஒரு சில அரைச் சதங்களை மட்டுமே அடித்துள்ளார்.
முக்கியமான போட்டிகளில் கே.எல்.ராகுல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அவர் இப்படியே தொடர்ந்தால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது சந்தேகம்தான் என, முன்னாள் கிரிக்கெட் வீரர்களே விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அந்த அடிப்படையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ராகுலுக்கு மிக முக்கியமான ஆட்டமாக மாறியுள்ளது.
கே.எல்.ராகுல் இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவர் ஆடும் லெவனில் நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் 137 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 17.12 ரன்கள்.
இதேபோன்று கடந்த ஆண்டு 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 251 ரன்களை அவர் எடுத்துள்ளார். சராசரி 27.88. இதில் 2 அரைச்சதம் அடங்கும்.
View this post on Instagram
2022-ல் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் 434 ரன்களை எடுத்திருக்கிறார். சராசரி 28.93. இதில் 6 அரைச்சதங்கள் அடங்கும்.
காஸ்ட்லி கிறிஸ்டியானோ... ஒரு நொடிக்கு ரொனால்டோ சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 30 போட்டிகளில் விளையாடி ராகுல் 822 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 25.68.
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக தொடர்கிறார் சேத்தன் சர்மா… புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 10-ஆம்தேதி கவுகாத்தியிலும், 2ஆவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனிலும், 3ஆவது போட்டி திருவனந்தபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும் நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kl rahul