ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

India vs Srilanka ODI : 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா…

India vs Srilanka ODI : 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா…

இலங்கை விக்கெட் வீழ்ந்ததை கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்

இலங்கை விக்கெட் வீழ்ந்ததை கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்

இலங்கை அணி 37.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்திருந்தபோது, அடுத்த சில ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி விரைவில் இழந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகாவின் போராட்டமும், அவரது சதமும் கவனம் ஈர்த்துள்ளன. இந்த போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 9 ஆவது விக்கெட்டிற்கு இலங்கை அணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா 83 ரன்களும், சுப்மன் கில் 70 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன்களை குவித்தார். ஷ்ரேயாஸ் 28 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்களை எடுத்தது.

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இலங்கை அணி ஆட்டத்தை தொடங்கியது. அதன் தொடக்க வீரர் பதும் நிசாங்காவை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிசாங்கா 80 பந்துகளை எதிர்கொண்டு 72 ரன்கள் எடுத்தார். அவிஷ்கா பெர்னான்டோ 5, குசால் மெண்டிஸ் 0, சரித் அசலங்கா 23, தனஞ்செய டி சில்வா 47 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி 37.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்திருந்தபோது, அடுத்த சில ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின்னர் பவுலர் கசுன் ரஜிதாவுடன் இணைந்த கேப்டன் தசுன் ஷனகா வெகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிக்சரும், பவுண்டரியுமாக விளாசிய ஷனகாவை வெளியேற்ற, கேப்டன் ரோகித் மேற்கொண்ட எந்த யுக்தியும் பலன் அளிக்கவில்லை. மறுபுறம் பவுலர் கசுன் ரஜிதாவின் விக்கெட்டை வீழ்த்த இந்திய பவுலர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவரோ சிறப்பான கம்பெனி கொடுத்து, அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

அதிக சதங்கள்.. சச்சினின் சாதனைகளை முறியடித்து சாதனை படைத்த விராட் கோலி

இந்த ஜோடி 12.1 ஓவர்கள் தாக்குப்பிடித்து 9 ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கடைசியில் ஓவர்தான் முடிந்ததே தவிர, இந்த ஜோடி களத்தில்தான் நின்றது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்த இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி  1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

First published:

Tags: Cricket, India vs srilanka