கோப்பையை வெல்லுமா இந்திய அணி..? இலங்கை அணி உடன் இன்று பலப்பரீட்சை

Inida vs Srilanka |

கோப்பையை வெல்லுமா இந்திய அணி..? இலங்கை அணி உடன் இன்று பலப்பரீட்சை
INDvsSL
  • Share this:
இந்தியா-இலங்கை இடையேயான கடைசி டி20 போட்டி, புனே மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேவில் நடைபெறுகிறது. இலங்கை அணியில் 16 மாதங்களுக்குப் பிறகு ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த மைதானத்தில் 2016-ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. எனவே, இதற்கு பதிலடி கொடுத்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது.
First published: January 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading