இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் சுழற்பந்தில் ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவும் வேகப்பந்தில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது ஷமி இடம்பெற்றிருந்தனர். தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா 28 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த போது லஹிரு குமாராவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான மாயன்க் அகர்வால் 33 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
இன்றைய போட்டியில் விராட் கோலி 4-வது வீரராக களமிறங்கினார். ஹனும விஹாரியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விராட் கோலி சிறப்பாக விளையாடினார். விராட் கோலி தனது 100-வது போட்டியில் 8,000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
Rishabh Pant walks back after a brilliant knock of 96 off 97 deliveries.
இதையடுத்து கோலி 45 ரன்னிலும் ஹனுமா விஹாரி 58 ரன்னிலும் அவுட்டாகினர். விக்கெட் கீப்பர் ரிஷப் தனது வழக்கமான பாணியில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசி 97 பந்தில் 96 ரன்கள் விளாசிய நிலையில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 357 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 45 ரன்கள் உடனும் அஸ்வின் 10 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.