இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் கடந்த போட்டியில் இடம்பெற்ற அதே வீரர்களுடன் இந்திய அணி களத்தில் இறங்கியுள்ளது. இலங்கை தரப்பில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் 1-1 என்று வெற்றி பெற்றுள்ளது.
மும்பையில் நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடா 23 பந்துகளில் 41 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவினார். ஷிவம் மாவி அந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
தொடர்ந்து புனேவில் நடைபெற்ற 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 207 ரன்களை சேஸ் செய்த இந்திய அணியில் அக்சர் படேல் 31 பந்துகள் 65 ரன்களை எடுத்து இறுதி ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அந்த போட்டியில் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இந்திய அணி தொடக்கத்திலேயே இழந்ததால் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் தொடர் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக 6.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி களம் கண்டுள்ளது.
ஆசிய கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் நேருக்கு நேர் மோதல்.. குஷியில் ரசிகர்கள்
கடந்த போட்டியில் இடம்பெற்ற அதே வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கியுள்ளது. இலங்கை தரப்பில் பனுகா ராஜபக்சேவுக்கு பதிலாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் ஆடும் 11 வீரர்கள் - இஷான் கிஷன்( விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
ரிஷப் பந்த்திற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது… மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு…
இலங்கை அணியின் 11 வீரர்கள் - பதும் நிஸ்ஸங்கா, குசால் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா(கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜிதா, டில்ஷான் மதுஷங்கா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, India vs srilanka