இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் 2 மாற்றங்களை கேப்டன் ரோஹித் சர்மா செய்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமாருக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்திய அணி தொடரை கைப்பற்றி இருப்பதால் 2 போட்டிகளிலும் இடம் பெறாதவர்களுக்கு வாய்ப்ப அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன் அடிப்படையில் முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படாத சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகீயோர் இடம்பெற்றுள்ளனர். 3 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் 6 பேட்ஸ்மேன்களுடன் இந்திய அணி களத்தில் இறங்கியுள்ளது.
இதேபோன்று இலங்கையில் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியில் தனஞ்செய டி சில்வாவிற்கு பதிலாக ஆஷென் பண்டாராவும், துனித் வெல்லலகேவிற்கு பதிலாக ஜெஃப்ரி வாண்டர்சேவும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் –
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் சாமி தரிசனம்…
அவிஷ்கா பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), ஆஷென் பண்டாரா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா(கேப்டன்), வனிந்து ஹசரங்கா, ஜெப்ரி வான்டர்சே, சாமிக்க கருணாரத்னா, கசுன் ராஜிதா, லஹிரு குமாரா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, India vs srilanka