ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

India vs Srilanka T20 : கடைசி டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி வீரர்கள் பட்டியல்…

India vs Srilanka T20 : கடைசி டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி வீரர்கள் பட்டியல்…

இந்திய அணி

இந்திய அணி

கடைசி டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதில் இந்திய உத்தேச அணியில் இடம்பெறும் வீரர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 3 போட்டிகளை கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரில், இலங்கை மற்றும் இந்திய அணி தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருக்கின்றன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, தொடரை கைப்பற்றும்.

முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இவ்விரு போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த வகையில் இன்றைய டாசில் வெற்றி பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும். கடைசி டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் 91  ரன்கள்  பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இலங்கை அணியில் கேப்டன் தசுன் ஷனகா 22 பந்துகளில் 56 ரன்களை அதிரடியாக சேர்த்தார். இதேபோல் தொடக்க பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். முதல் போட்டியில் இடம்பெற்ற சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக ராகுல் திரிபாதி இரண்டாவது போட்டியில் இடம் பெற்றார். இதேபோன்று ஹர்ஷல் படேலுக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அணியில் இணைந்தார்.

தொடரை வெல்லுமா இந்தியா..? இலங்கையுடன் இன்று கடைசி டி20 போட்டி

இன்றைய கடைசி டி20 போட்டியில் சுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஸ்ட்லி கிறிஸ்டியானோ... ஒரு நொடிக்கு ரொனால்டோ சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற, முழு திறமையை வெளிப்படுத்தும் என்பதால், இன்றைய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

First published:

Tags: Cricket, India vs srilanka