ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா - இலங்கை மோதும் 2வது டி20 போட்டி... இந்தூரில் இன்று பலப்பரீட்சை

இந்தியா - இலங்கை மோதும் 2வது டி20 போட்டி... இந்தூரில் இன்று பலப்பரீட்சை

INDvsSL

INDvsSL

India vs Srilanka 2nd T20 | மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கார் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20  கிரிக்கெட் போட்டி இன்று இரவு இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா வந்துள்ள மலிங்கா தலைமையிலான இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டி தொடரில் விளையாடுகிறது.

கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடக்க இருந்த முதலாவது டி20  போட்டி மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2வதுடி 20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கார் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. காயத்தில் இருந்து மீண்டு களம் காணும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

மலிங்கா தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணியும் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது.

First published:

Tags: Cricket